அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: ஒரு நாளுக்கு மட்டும் 1 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம்
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவின் மூலம் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயில்
பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வரும் ஜனவரி 22 -ம் திகதி நடைபெற உள்ளது. அப்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நிறுவ உள்ளார்.
மேலும், ராமர் கோயிலின் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்கள் அழைக்கப்பட உள்ளனர். இவர்களை தவிர கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் சொல்லப்படுகிறது.
இந்த நிகழ்வை இந்திய மக்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டினரும் உற்று நோக்கி கொண்டிருக்கின்றனர். இதனால் அயோத்தியில் புதிய விமான நிலையம், புதிய ரயில் நிலையம், புதிய நீர்வழி போக்குவரத்து, ஹொட்டல் , உணவகம் என புதுப்பொலிவு அடைந்துள்ளது.
ரூ.1 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம்
இந்நிலையில், ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு ஜனவரி 22 -ம் திகதி மட்டும் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் உருவாகும் என்று வர்த்தகர்களின் அமைப்பான CAIT அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த CAIT அமைப்பானது பல்வேறு மாநிலங்களில் உள்ள 30 நகரங்களின் வர்த்தகச் சங்கங்களில் இருந்து பெறப்பட்ட கருத்துக்கள் மூலம் இதனை தெரிவித்துள்ளது.
மேலும், ராமர் கோயில் திறப்பு விழாவானது சமய மற்றும் மத உணர்வுகளை எதிரொலிப்பது மட்டுமல்லாமல், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுகிறது.
அதோடு, புதிய தொழிலையும் அயோத்தியில் உருவாக்க வழிவகுக்கின்றன. தற்போது அயோத்தியில், ராமர் கொடி, பேனர், தொப்பி, டிசர்ட், ராமர் முகம் கொண்ட பிரின்ட் செய்யப்பட்ட குர்தா ஆகியவை டிமாண்டில் உள்ளன.
மேலும், ராமர் கோயிலின் வடிவத்தை 5 கோடி விற்பனையாளர்கள் இந்தியா முழுவதும் விற்பனை செய்துள்ளனர். அதோடு, உணவு பொருட்கள், குளிர்பானங்கள், ஸ்னாக்ஸ், மருந்துப் பொருட்கள், டாக்சி சேவைகள், விடுதிகள் ஆகியவற்றிற்கும் அயோத்தியில் டிமாண்டில் தான் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |