30 ஆண்டுகளுக்கு முன்பு அயோத்தி குறித்து கமல் ஹாசன் என்ன பேசினார்? வைரலாகும் பழைய வீடியோ
பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து கமல் ஹாசன் பேசிய பழைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு
பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலில் ஜனவரி 22 -ம் திகதி ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டு கண்களில் இருந்த துணி அகற்றப்பட்டது.
இந்திய பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை பூஜையில் கலந்து கொண்டார். மேலும், பெரிய பெரிய தொழிலதிபர்கள் முதல் பிரபலங்கள் வரை அயோத்தியில் குவிந்தனர். குறிப்பாக நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி, சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, அனில் கும்ப்ளே ஆகியோர் கலந்து கொண்டனர்.
கமல் ஹாசன் கூறியது என்ன?
இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் திறப்பு குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், "நான் 30 ஆண்டுகளுக்கு முன்பே இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளேன். அதை தான் இப்பவும் கூறுவேன். அதில் எந்த மாற்றமும் இல்லை" என்றார்.
30 ஆண்டுகளுக்கு முன்பு...
இதனை தொடர்ந்து, 30 ஆண்டுகளுக்கு முன்பு பாபர் மசூதி குறித்து கமல் ஹாசன் பேசிய வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அவர், "பாபர் மசூதி இடிக்கப்பட்டது எனக்கு பெரிய கோபத்தை ஏற்படுத்தியது. ஒரு நடிகனாக இருக்கும் போது இதை பற்றி பேசக்கூடாது என்று சொன்னார்கள். ஆனால் நான் பேசுவேன்.
ராமர் கோவில் பற்றி
— 🖤♥️தூய துறவி (@iam_Vsk) January 22, 2024
என்ன சொல்லி இருப்பார்னு தேடி பாத்தேன்
உண்மையாவே Great 👍
ரஜினியை விட கமல் இந்த விஷயத்தில் புரிதல் உள்ள மனிதர்.#குதிரை_மகனுக்கு_குடமுழுக்கு pic.twitter.com/i6BR4brB88
3.7 ஏக்கர் நிலத்தில் இருந்த மசூதியை இடித்தார்கள். டிசம்பர் 6 -ம் திகதியை வரலாற்றில் அழிக்க வேண்டும். இது எல்லாம் அரசியல். மதத்தை வைத்து அரசியல் செய்ய கூடாது. இது எனக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது" என்று கூறியுள்ளார்.
இதனிடையே, பாபர் மசூதி இடிப்பு குறித்து டெல்லியில் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவை சந்தித்து கமல் ஹாசன் எதிர்ப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |