ராமர் கோயில் குடமுழுக்கு : அயோத்தியில் குவிந்த திரைப்பிரபலங்கள்
அயோத்தியில் இன்று குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளதால் பல திரைப்பிரபலங்கள் அயோத்தியை சென்றடைந்துள்ளனர்.
ராமர் கோயில் குடமுழுக்கு
அயோத்தில் உள்ள ராமர் கோவிலில் இன்று மதியம் 12.30 மணி அளவில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு நடைபெறவிருகிறது.
இந்நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகப் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை மதியம் 1.28 மணியளவில், 51 அங்குலம் ராமர் சிலை கோவிலின் கருவறையில் வைக்கப்பட்டது.
இன்று ராமர் அவதரித்த நேரமான அபிஜித் முகூர்த்த வேளையில், சூரியன் உச்சம் பெற்றிருக்கும் நேரத்தில் பிரதிஷ்டை நிகழ்வு நடைபெறவுள்ளது.
சிலையானது கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டவுடன் குடமுழுக்கு நடைபெறும். இந்தியாவில் உள்ள அனைத்து கோயில்களிலும் மத சடங்குகள், யாகங்கள், ஹோமங்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீத்தாராமன், ஜெய்சங்கர், நிதின் கட்காரி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கவுள்ளன.
இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக, நாடு முழுவதிலும் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் குவிந்த திரைப்பிரபலங்கள்
ரஜினிகாந்த்
தனுஷ்
ஜாக்கி ஷெராப்
விவேக் ஓபராய்
கங்கனா ரனாவத்
ஹேம மாலினி
விராட் கோலி
அனுஷ்கா ஷர்மா
ஆலியா பட்
ரன்வீர் கபூர்
ராம் சரண்
ரன்தீப் ஹூடா
ஆயுஷ்மான் குரானா
மாதுரி தீட்சித்
மதுர் பண்டார்கர்
மோகன்லால்
சிரஞ்சீவி
யாஷ்
பிரபாஷ்
மேலும் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தற்காலிகமாக திரை அமைத்து கும்பாபிஷேக நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பு செய்யவும் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |