அயோத்தி ராமர்: ஒரு மாதத்திற்கு கிடைத்த உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?
கடந்த மாத்தில் அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு மாதத்திற்கான உண்டியல் காணிக்கை விபரம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அயோத்தி ராமர்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது.
இக்கோயிலானது கடந்த மாதம் 22 ஆம் திகதி திறக்கப்பட்டது. கோயிலின் கருவறையில் 51 அங்குல குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்தார்.
இந்நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகப் பிரம்மாண்டமாக செய்யப்பட்டிருந்தது.
கோவிலை சுற்றி இன்று வரையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருப்பதனால், குழந்தை ராமர் இருக்கும் இடம் மற்றும் பக்தர்கள் தரிசிப்பதற்காக திறக்கப்பட்டது.
மக்களுக்காக திறந்த முதல் நாளில் மட்டும் சுமார் 5 லட்ச பக்தர்கள் வருகை தந்துள்ளதாக உத்தர பிரதேச தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை தெரிவித்தது.
இந்நிலையில் ஒரு மாத்தில் மாத்திரம் கிடைத்த காணிக்கை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு மாதத்திற்கு கிடைத்த உண்டியல் காணிக்கை
கோயில் திறக்கப்பட்ட ஒரு மாதத்தில் ரூ.25 கோடி வருமானம் கிடைத்துள்ளது. 10 கிலோ தங்கம், 25 கிலோ வெள்ளி நகைகள், காசோலை, என கோயில் உண்டியலில் கிடைத்த காணிக்கை என மொத்தம் ரூ.25 கோடி கிடைத்துள்ளதாக கோயில் அறக்கட்டளையின் அலுவலக பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் ராமர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வெள்ளி, தங்க நகைகளை நன்கொடையாக வழங்குகின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 60 லட்சம் பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்துள்ளனர். நன்கொடையாக கிடைத்த தங்கம், வெள்ளி மற்றும் பிற விலைமதிப்பற்ற பொருட்களை பாதுகாக்கும் வகையில் அரசிடம் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |