அயோத்தி ராமர் கோயிலில் நாளை நிகழவுள்ள அபூர்வ நிகழ்வு - என்ன தெரியுமா?
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ராமர் கோயிலில் நாளை அபூர்வ நிகழ்வு ஒன்று நிகழவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர்
கடந்த மாத்தில் அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டு ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கோயிலின் கருவறையில் 51 அங்குல குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்தார்.
இந்நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகப் பிரம்மாண்டமாக செய்யப்பட்டிருந்தது.
கோவிலை சுற்றி இன்று வரையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருப்பதனால், குழந்தை ராமர் இருக்கும் இடம் மற்றும் பக்தர்கள் தரிசிப்பதற்காக திறக்கப்பட்டிருந்தது.
தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழந்தை ராமரை தரிசிப்பதற்காக வந்துக்கொண்டே இருக்கிறார்கள்.
இந்நிலையில் நாளை அபூர்வ நிகழ்வு ஒன்று நிகழவிருப்பதாக தெரியவந்துள்ளது.
நாளை நிகழவிருக்கும் அபூர்வ நிகழ்வு
ராமர் கோயிலில் தற்போது ராமநவமி விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் 9ஆவது நாள் விழாவான சூரிய அபிஷேக மகோற்சவம் நடைபெறவுள்ளது.
இந்த விழாவின் போது பகல் 12.16 மணிக்கு கருவறையில் வீற்றிருக்கும் குழந்தை ராமர் சிலையின் நெற்றியில் சூரியனின் ஒளிக்கதிர்கள் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெறவுள்ளதாக கோவில் கட்டுமான குழு தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான நிருபேந்திர மிஸ்ராவும் தெரிவித்துள்ளார்கள்.
பால ராமரின் நெற்றியில் 75 மில்லி மீட்டர் அளவுக்கு திலகம் போல இந்த சூரிய கதிர்கள் தென்படும்.
இது சுமார் 5 நிமிடங்களுக்கு நீடிக்கப்படும். இதை காண ஏராளமாக பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் பக்தர்கள் காணும் வகையில் 100 இற்கும் மேற்பட்ட LED திரையில் காட்டுவதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |