கருகருன்னு அடர்த்தியாக முடி வளர ஆயுர்வேத எண்ணெய்: எப்படி தயாரிப்பது?
மனிதர்களுக்கு இருக்கும் பெரும்பாலும் பிரச்சனைகளில் முடி பிரச்சனைகளும் ஒன்று.
முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வழுக்கை, வலுவிழந்த முடி மற்றும் நரை முடி என பல்வேறு முடி பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம்.
அடர்த்தியான மற்றும் நீளமான முடியை பெற, இந்த ஆயுர்வேத எண்ணெயை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்துங்கள்.
தேவையான பொருட்கள்
- வல்லாரைச்சாறு - 100 மில்லி
- கரிசலாங்கண்ணி சாறு - 100 மில்லி
- நல்லெண்ணெய் - 100 மில்லி
- நெல்லிக்காய் சாறு - 100 மில்லி
- தேங்காயெண்ணெய் - 100 மில்லி
- வெந்தயம் பொடித்தது - 3 டீஸ்பூன்
எப்படி தயாரிப்பது?
கரிசலாங்கண்ணி கீரையை சுத்தம் செய்து இலேசாக தண்ணீர் தெளித்து சாறு எடுத்துகொள்ளவும்.
இதே போன்று வல்லாரைக்கீரை இலேசாக தண்ணீர் தெளித்து வாங்கி சாறு எடுக்கவும்.
நெல்லிக்காய் கொட்டை நீக்கி தண்ணீர் சேர்க்காமல் சாறு எடுக்கவும். அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து வைக்கவும்.
நல்லெண்ணெய் தேங்காயெண்ணெய் இரண்டையும் கலந்து இரும்பு வாணலியில் சூடேற்றி கொள்ளவும்.
பிறகு கலந்து வைத்த சாறு சேர்த்து வெந்தயம் சேர்த்து விடவும் எண்ணெய் கொதித்து சாறு சத்தம் அடங்கும் போது கீழே இறக்கி விடவும்.
பிறகு அறைவெப்பநிலையில் வரும் போது வடிகட்டாமல் கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.
எப்படி பயன்படுத்துவது?
தலைக்கு குளிப்பதற்கு முன்பு இந்த எண்ணெயை நன்றாக உச்சந்தலையிலும் முடிகளிலும் தடவி விடவும்.
20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கலாம். குழந்தைகள், ஆண்களும் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம்.
தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தலைமுடி உதிர்வது குறையும், முடி அடர்த்தியாக இருப்பதை பார்க்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |