எளிதான விசாவில் பட்ஜெட் சுற்றுலா! இந்தியர்களை கவரும் நாடு..எது தெரியுமா?
இந்திய சுற்றுலாப் பயணிகளின் புதிய விருப்ப நாடாக அசர்பைஜான் மாறி வருகிறது.
அசர்பைஜான்
மேற்கு ஆசியா மட்டும் கிழக்கு ஐரோப்பிய எல்லையில் பகுதியில் அமைந்துள்ள நாடு அசர்பைஜான் (Azerbaijan).
இந்நாடு தற்போது தாய்லாந்து, மாலத்தீவு, துபாய் ஆகிய நாடுகளின் வரிசையில் சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாக இணைந்துள்ளது.
குறிப்பாக இந்திய சுற்றுலாப் பயணிகளை அசர்பைஜான் கவர்ந்திழுக்கிறது. இதற்கு காரணம் குறைந்த செலவு, எளிதான விசா, இந்தியர்களுக்கு என நட்பான சூழல் ஆகியவை ஆகும்.
இந்நாட்டின் பாகு நகரின் நவீன கட்டிடங்கள் மற்றும் நவீன சின்னங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளன.
மேலும் இங்குள்ள ஃப்ளேம் டவர்ஸ், காஸ்பியன் கடல் ஆகியவை சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்றன.
விமான சேவை
இந்தியாவில் இருந்து பாகு நகருக்கு நேரடி விமானங்கள் இல்லை என்றாலும், ஏர் அரேபியா மற்றும் ஃப்ளை துபாய், கத்தார் ஏர்வேஸ் போன்ற விமான நிறுவனங்கள் மூலம் 7 முதல் 10 மணிநேரத்தில் அங்கு சென்றுவிடலாம்.
அசர்பைஜான் செல்ல ரூ.1800, ரூ.2000 விலையில் இ-விசாவை ஒன்லைனில் பெறலாம். விமான சேவையின் சராசரி செலவு ரூ.28,000 முதல் ரூ.45,000 வரை இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |