LPLயில் அடுத்தடுத்து அவுட் ஆன கண்டி வீரர்கள்..81 ஓட்டங்கள் விளாசி விஸ்வரூபமெடுத்த முகமது ஹாரிஸ்
பாகிஸ்தானின் முகமது ஹாரிஸ் அதிரடி மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் பந்துவீச்சில் பி-லவ் கண்டி அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முகமது ஹாரிஸ் ருத்ர தாண்டவம்
கொழும்பில் நடந்த லங்கா பிரீமியர் லீக் போட்டியில் பி-லவ் கண்டி மற்றும் ஜாப்னா கிங்ஸ் அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய கண்டி அணியில் பஹர் ஜமான் (22), சண்டிமல் (1), சஹன் அரச்சிகே (2) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர்.
ஆனால் பாகிஸ்தானின் முகமது ஹாரிஸ் விஸ்வரூப ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 51 பந்துகளில் 2 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 81 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் கண்டி அணி 8 விக்கெட்டுக்கு 178 ஓட்டங்கள் குவித்தது. துஷாரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
சோயிப் மாலிக் அரைசதம்
பின்னர் களமிறங்கிய ஜாப்னா கிங்ஸ் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், சோயிப் மாலிக் மற்றும் திசாரா பெரேராவின் அதிரடியால் இலக்கை நெருங்கியது.
எனினும், அந்த அணியால் 20 ஓவரில் 176 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால் கண்டி அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மாலிக் 55 (37) ஓட்டங்களும், திசாரா பெரேரா 36 (20) ஓட்டங்களும் எடுத்தனர். கண்டி அணி தரப்பில் ஏஞ்சலோ மேத்யூஸ் 3 விக்கெட்டுகளும், நுவன் பிரதீப் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
B-Love Kandy leave the Jaffna Kings 179 runs to chase!#LPL2023 #LiveTheAction pic.twitter.com/FerzpkRmya
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) August 12, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |