பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி?
பிரித்தானியாவில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் விபத்திற்குள்ளானது.
சிறிய ரக விமானம்
லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் இருந்து, Beech B200 என்ற 40 அடி நீளமுள்ள சிறிய ரக விமானம் நெதர்லாந்து நோக்கி கிளம்பியது.
ஆனால், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஓடுபாதையில் இருந்து 175 அடி உயரத்தில் வெடித்து விபத்திற்குள்ளானது.
இதனால் வானத்தில் ஒரு கருப்பு புகை மூட்டம் எழும்பியது. இதுதொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
12 பயணிகள் வரை பயணிக்கக்கூடிய விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது தெரிய வரவில்லை.
எசெக்ஸ் பொலிஸார், ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு இயந்திரங்கள் அனைத்தும் சம்பவ இடத்தில் உள்ளன.
எசெக்ஸ் அதிகாரிகள்
இந்த விபத்து குறித்து எசெக்ஸ் அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், "சவுத்எண்ட் விமான நிலையத்தில் ஒரு கடுமையான சம்பவம் நடந்த இடத்தில் நாங்கள் தொடர்ந்து இருக்கிறோம். 12 மீற்றர் விமானம் மோதியதாக மாலை 4 மணிக்கு சற்று முன்பு எங்களுக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்தில் உள்ள அனைத்து அவசர சேவைகளுடனும் நாங்கள் இப்போது பணியாற்றி வருகிறோம். மேலும், பல மணிநேரம் அந்தப் பணி தொடரும். இந்தப் பணி தொடரும் வரை, முடிந்தவரை இந்தப் பகுதியைத் தவிர்க்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவித்தனர்.
ஃப்ளைட்ராடரின் கூற்றுப்படி, விமானம் வடகிழக்கு திசையில் சுமார் 120 மைல் வேகத்தில் புறப்பட்டு, சுமார் 175 அடி வேகத்தை எட்டியதாகத் தெரிகிறது.
ஆனால் தரையை விட்டு வெளியேறி, வடக்கு நோக்கித் திரும்பிய பிறகு வேகம் குறைந்ததாக தரவு குறிப்பிடுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |