மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கத்தை முன்பே கணித்த பாபா வங்கா! மேலும் வரப்போகும் ஆபத்து
2025ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்பில் மியான்மர் நிலநடுக்கமும் இருந்துள்ளது.
பாபா வங்கா கணிப்பு
பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா தனது வாழ்நாளில் கணித்த பல விடயங்கள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இதில் 9/11 அமெரிக்க தாக்குதல், செர்னோபில் பேரழிவு ஆகியவை அடங்கும். அதேபோல் 2025ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நிகழ்வுகள் குறித்தும் இவர் கணித்திருக்கிறார்.
அவற்றில் ஒன்று தற்போது நிகழ்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதுதான் தாய்லாந்து, மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள்.
இந்த ஆண்டு முழுவதுமே பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்களும், இயற்கை சீற்றங்களும் உண்டாகும் என பாபா வங்கா கணித்திருந்தார்.
புடின் முக்கிய பொறுப்பு வகிப்பார்
அதேபோல், அமெரிக்க மேற்கில் நிலநடுக்கங்கள் மனித சமுதாயத்தில் பேரழிவு தரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கணிப்பில் இருந்துள்ளது.
மேலும் அவரது கணிப்புகளில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உலகின் பல்வேறு அம்சங்களில் முக்கியமான பொறுப்புகளை வகிப்பார், உக்ரைன் போரில் அவர் முன்னிலை வகிப்பார் என்றும், ஐரோப்பிய நாடுகள் பின்தங்கும் என்றும் கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் வேற்றுக்கிரகவாசிகளின் தாக்குதல் ஏற்படக்கூடும் என்றும், உலகம் முழுவதும் போரால் பாதிக்கப்படும் என்றும் கணித்திருக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |