மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆற்றல் - 2027ஆம் ஆண்டிற்கு பாபா வங்காவின் கணிப்பு
baba vanga prediction about 2027 humans get super power: 2027ஆம் ஆண்டில் சிலருக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆற்றல் கிடைக்கும் என பாபா வங்கா கணிப்பு தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டிற்கு பாபா வங்காவின் கணிப்பு
பால்கன் நாடுகளின் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பாபா வங்கா, 1911ஆம் ஆண்டில் பல்கேரியாவில் பிறந்து, 1996 ஆம் ஆண்டில் மரணமடைந்தவர்.

சிறு வயதிலேயே கண்பார்வையை இழந்த பாபா வங்கா, அதன் பின்னர் எதிர்காலத்தை கணிக்கும் திறனை பெற்றதாக கூறப்படுகிறார்.
9/11 இரட்டைக்கோபுர தாக்குதல், இளவரசி டயானா மரணம், கோவிட் என இவர் பல்வேறு நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்ததாக நம்பப்படுவதால், பாபா வங்கா உலகளவில் கவனம் பெற்றார்.
இந்நிலையில், 2027 ஆம் ஆண்டில் நடக்கப்போவதாக கூறப்படும் இவரின் விசித்திரமான கணிப்பு ஒன்று குறித்து அவரது ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர்.
2027 ஆம் ஆண்டில் ஒரு மர்மமான நோய் அல்லது மரபணுப் பரிசோதனை சில மனிதர்களுக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆற்றல்களை வழங்கும் என அவர் கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நோய் அல்லது பரிசோதனை பலரை பாதித்தாலும், ஒரு சிலருக்கு மட்டுமே இந்த சக்திகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
ஆனால், அவர்களின் சக்திகள் என்னவாக இருக்கும் அல்லது இது எப்படி நிகழும் என்பது குறித்த தகவல்கள் எதுவும் இல்லை.
இதே போல் 2026 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் வேற்று கிரகவாசிகள் மனிதர்களை தொடர்பு கொள்ளக்கூடும் என கணிப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய உலகப் போர், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பெரும் இயற்கை பேரழிவுகள், தொழில்நுட்ப அச்சுறுத்தல்கள் ஆகியவை குறித்தும் கணிப்பு தெரிவித்திருந்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |