சிரியா வீழ்ந்தால் மூன்றாம் உலகப்போர்... பாபா வங்காவின் திகிலூட்டும் கணிப்பு பலிக்குமா?
இரட்டைக்கோபுர தாக்குதல் முதல் பிரெக்சிட் வரை பாபா வங்கா துல்லியமாக கணித்ததாக கருதப்படும் நிலையில், அவர் மூன்றாம் உலகப்போர் குறித்து கணித்த கணிப்பொன்றைக் குறித்த ஒரு செய்தி திகிலை ஏற்படுத்தியுள்ளது.
விரைவில் மூன்றாம் உலகப்போர்?
பால்கன் நாடுகளின் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பார்வையிழந்த தீர்க்கதரிசியான பாபா வங்கா, தான் 1996ஆம் ஆண்டு மரணமடையும் முன்பே, சிரியாவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் என கணித்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில், சிரியா நாட்டு கிளர்ச்சியாளர்கள், தலைநகர் டமாஸ்கஸுக்குள் நுழைந்துள்ளார்கள், சிரிய ஜனாதிபதியான பஷார் அல் அசாத் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார்.
ஆக, இது பாபாவின் கணிப்பு துவங்கும் கட்டமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. சிரியா வீழ்ந்ததும் உடனடியாக மேற்குக்கும் கிழக்குக்கும் இடையே மிகப்பெரிய போர் ஒன்று துவங்கும் என எதிர்பார்க்கலாம்.
இளவேனிற்காலத்தில், கிழக்கில் ஒரு போர் துவங்கும். அதைத் தொடர்ந்து, மூன்றாம் உலகப்போர் துவங்கும், கிழக்கில் நடக்கும் போர், மேற்கை அழிக்கும் என்று கூறியுள்ளார் பாபா.
ஆக, பாபாவின் கணிப்பின்படி, சிரியா கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்துள்ளதால், மூன்றாம் உலகப்போர் துவங்கப்போகிறதோ என்ற கேள்வி பலர் மனதிலும் எழுந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |