2022-ஆம் ஆண்டு உலகில் என்ன நடக்கும்? பாபா வாங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்பு
2022-ஆம் ஆண்டு என்ன நடக்கும் என்பதை பாபா வாங்கா கணித்துள்ளது தற்போது வெளியாகியுள்ளது.
பல்கேரியாவைச் சேர்ந்தவர் Baba Vanga. 1911-ல் பிறந்த இவர் தன்னுடைய 12 வயதில் அங்கு ஏற்பட்ட சூறாவளி ஒன்றில் சிக்கி கண்பார்வையை இழந்தார்.
இருப்பினும், தனக்கு கடவுள் எதிர்காலத்தை கணிக்கும் சக்தியை கொடுத்திருப்பதாக கூறி வந்தார்.
இதையடுத்து இவர் கடந்த 1996-ஆம் ஆண்டு தன்னுடைய 84 வயதில் உயிரிழந்தார். இவர் உயிரிழப்பதற்கு முன்பு, வரும் ஆண்டுகளில் என்னென்ன நடக்கும் என்பதை கணித்துள்ள இவர், 5079 -ஆம் ஆண்டு உலகம் முடிவுக்கு வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவருடைய கணிப்புகள் சுமார் 80 சதவீதத்திற்கு மேல் உலகில், நடந்துள்ளதால் இவருடைய கணிப்புகள் உலக மக்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில், இவர் 2022-ஆம் ஆண்டு உலகில் என்ன நடக்கும் என்பதை கணித்துள்ளார். அதில், நிச்சயமாக இந்த ஆண்டு ஒரு உண்மையான போர் வெடிக்கும். ஆசிய தலைவர் ஒருவர் அவருடைய தலைவர் அதிகாரத்தில் இருந்து தூக்கிவீசப்படுவார்.
அவரது நாடு ஆயுத மோதலின் களமாக மாறும். இதற்கு ஐரோப்பா அணுவாயுத தாக்குதலின் மூலம் பதிலளிக்கும்.
வானிலை மற்றும் காலநிலையை பொறுத்தவரை இந்த ஆண்டில் அமெரிக்கா மோசமான வறட்சியை எதிர்கொள்ளும். பூமியின் மறுபக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மழை கொட்டி தீர்க்கும்.
சீனாவின் தலைநகரம் தண்ணீரால் பரவும் நோயால் பாதிக்கப்படுவர், இதில் ஏராளமான மக்கள் இறக்க நேரிடும்.
அதே போன்று ஜப்பானை மழை விட்டு வைக்காது, மழை கொட்டி தீர்க்கும். ஆப்பிரிக்கக் கண்டத்தின் ஏழ்மையான பகுதிகளை பஞ்சம் அழிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.              
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        