பாபர் அஸாம், முகமது ரிஸ்வானுக்கு இடமில்லை! ஆசியக் கிண்ணத் தொடருக்கான பாகிஸ்தான் கேப்டன் இவர்தான்
ஆசியக் கிண்ணத்தை தொடரில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணியில் பாபர் அஸாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் இடம்பெறவில்லை.
முத்தரப்பு தொடர்
செப்டம்பர் மாதம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று அணிகள் மோதும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.
இதில் விளையாட உள்ள பாகிஸ்தான் அணியை PSB அறிவித்துள்ளது. அனுபவ வீரர்களான பாபர் அஸாம் (Babar Azam) மற்றும் முகமது ரிஸ்வான் (Mohammad Rizwan) ஆகியோருக்கு இந்த தொடரில் விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
அதேபோல் ஆசியக் கிண்ணத் தொடரிலும் அவர்கள் இருவரும் விளையாட மாட்டார்கள் என தெரிய வந்துள்ளது.
சல்மான் அஹா
இரு தொடர்களிலும் விளையாட உள்ள பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் அஹா (Salman Agha) அணித்தலைவராக செயல்பட உள்ளார்.
இவரது தலைமையிலான பாகிஸ்தான் அணி சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதில் விளையாடிய 15 வீரர்களும் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
அணி விபரம்
- சல்மான் அஹா
- அப்ரார் அகமது
- ஃபஹீம் அஷ்ரப்
- ஹாரிஸ் ராப்
- ஹசன் அலி
- ஹசன் நவாஸ்
- ஹுசைன் தலத்
- குஷ்தில் ஷா
- முகமது ஹாரிஸ்
- முகமது நவாஸ்
- முகமது வாசிம்
- ஷஹிப்ஸதா ஃபர்ஹான்
- சைம் அயூப்
- சல்மான் மிர்ஸா
- ஷஹீன் அப்ரிடி
- சுஃபியன் முகியீம்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |