பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமை செமையாக அவுட்டாக்கிய வங்கதேச வீரர்! போல்டாகி வெளியேறும் காட்சி
வங்கதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி வீரர் பாபர் அசாம் போல்டாகி வெளியேறும் வீடியோ காட்சி இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் அணி, வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கிடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட முதல் டெஸ்ட் போட்டி, கடந்த 26 -ஆம் திகதி துவங்கியது.
இதில், முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 330 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது. அந்தணியில் அதிகபட்சமாக லிடன் தாஸ் சதம் அடித்து 114 ஓட்டங்கள் எடுத்தார், பாகிஸ்தான் அணியில் ஹசன் அலி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதன் பின் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 286 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
வங்கதேச அணியில் Taijul Islam(சுழற்பந்து வீச்சாளர்) 7 விக்கெட்டுகள் வீழ்த்தி பாகிஸ்தான் அணியை மிரட்டினார்.
Athar Ali Khan is super excited after seeing Babar out by Mehdi ,?#PakvsBan pic.twitter.com/pwaAURCIF4
— Jawad Ahmad (@Jawadspeaks_) November 28, 2021
இதில் மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான Mehidy Hasan பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரரான பாபர் அசாமை தன்னுடைய மாயாஜால சுழற்பந்து வீச்சு மூலம் போல்டாக்கி வெளியேற்றினார்.
பாபர் அசாம் அந்த பந்து எப்படி போல்டில் பட்டது என்பது போல், பவுலியன் திரும்பினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
மேலும், வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 39 ஓட்டங்கள் எடுத்து 83 ஓட்டங்கள் முன்னிலையுடன் ஆடி வருகிறது.