ரோஹித் ஷர்மாவை பின்னுக்கு தள்ளி சாதனை பட்டியலில் முதலிடம் பிடித்த பாபர் அசாம்
T20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் சாதனையை பாபர் அசாம் முறியடித்துள்ளார்.
பாகிஸ்தான் அபார வெற்றி
பாகிஸ்தான் சென்றுள்ள தென் ஆப்பிரிக்கா அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

நேற்று ;லாகூரில் நடைபெற்ற 2வது T20 போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பாட்டம் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 110 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக டெவால்ட் பிரெவிஸ் 25 ஓட்டங்கள் எடுத்தார்.

111 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 13.1 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பில் 112 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அயூப் 71 ஓட்டங்கள் குவித்தார்.
முதலிடத்தில் பாபர் அசாம்
இதில், 11 ஓட்டங்கள் எடுத்த பாபர் அசாம் சர்வதேச T20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் சாதனையை படைத்துள்ளார்.

T20 கிரிக்கெட்டில் 123 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள பாபர் அசாம், 4234 ஓட்டங்கள் எடுத்து அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
151 இன்னிங்ஸ்களில் விளையாடி, 4231 ஓட்டங்கள் குவித்து முதலிடத்தில் இருந்த ரோஹித் சர்மா தற்போது 2வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.
4188 ஓட்டங்களுடன் விராட் கோலி 3வது இடத்திலும், 3869 ஓட்டங்களுடன் ஜோஸ் பட்லர் 4வது இடத்திலும், 3710 ஓட்டங்களுடன் பால் ஸ்ட்ரிங் 5வது இடத்திலும் உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |