807 நாட்களுக்கு பின் சதமடித்த பாபர் அஸாம்: பாகிஸ்தானிடம் தொடரை இழந்த இலங்கை அணி
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது.
ஜனித் லியானகே அரைசதம்
ராவல்பிண்டியில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. 
முதலில் ஆடிய இலங்கை அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ஓட்டங்கள் குவித்தது. ஜனித் லியானகே (Janith Liyanage) 54 (63) ஓட்டங்களும், கமிந்து மெண்டிஸ் 44 (38) ஓட்டங்களும் எடுத்தனர். ஹாரிஸ் ராஃப், அப்ரார் அகமது தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 
பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 289 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பாபர் அஸாம் சதம்
பாபர் அஸாம் (Babar Azam) ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களும், பஹர் ஜமான் 78 (93) ஓட்டங்களும், மொஹம்மது ரிஸ்வான் 51 (54) ஓட்டங்களும் எடுத்தனர். 
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது. பாபர் அஸாம் 83 இன்னிங்ஸ்களுக்கு பிறகு சதம் அடித்திருந்தார்.
இது அவருக்கு 20வது ஒருநாள் சதமாகும். குறைந்த இன்னிங்ஸ்களில் (136) இந்த இலக்கை எட்டிய மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். 

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |