22 மாதங்களில் ஒரு அரைசதம் கூட இல்லை..பாபர் அசாமை அதிரடியாக நீக்கிய பாகிஸ்தான்
இங்கிலாந்துக்கு எதிரான 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள பாகிஸ்தான் அணியில் இருந்து பாபர் அசாம் நீக்கப்பட்டுள்ளார்.
வரலாற்று தோல்வி
முல்தானில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் வரலாற்று தோல்வியடைந்தது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் 15ஆம் திகதி முல்தானில் தொடங்குகிறது. இந்நிலையில் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
? Pakistan name squad for second and third Tests against England ?#PAKvENG | #TestAtHome pic.twitter.com/EHS9m84TXK
— Pakistan Cricket (@TheRealPCB) October 13, 2024
இதில் நட்சத்திர வீரர் பாபர் அசாம் நீக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த டெஸ்ட் போட்டியில் முறையே 5 மற்றும் 30 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.
பாபர் அசாம் நீக்கம்
துடுப்பாட்டத்திற்கு சாதகமாக மைதானம் இருந்ததால் ஷான் மசூட் (151), அப்துல்லா ஷாஃபிக் (102) மற்றும் அகா சல்மான் (104) சதம் ஆகியோர் விளாசினார்.
ஆனால் பாபர் அசாம் ஓட்டங்கள் எடுக்க திணறினார். முன்னதாக அவர் 2022ஆம் ஆண்டு டிசம்பரில் இருந்து ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இதனால் கடும் விமர்சனங்களை சந்தித்த அவர் தற்போது அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டுள்ளார்.
அதேபோல் ஷாஹீன் ஷா அப்ரிடி, நஸீம் ஷா ஆகிய இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |