ரன் ஓட வேண்டாம் என்ற ஸ்மித்..அவுட் ஆனதால் கோபத்தில் பாபர் அஸாமின் செயல் (வைரல் வீடியோ)
பிக் பாஷ் லீக் போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் மீதான கோபத்தால் பாபர் அஸாம் எல்லைக்கோட்டினை துடுப்பால் அடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
நேற்று நடந்த பிக் பாஷ் லீக் போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் (Steven Smith) மற்றும் பாபர் அஸாம் இடையில் உரசல் ஏற்பட்டது.
"Wasn't happy, Babar." 😳
— KFC Big Bash League (@BBL) January 16, 2026
Drama in the middle of the SCG after Steve Smith knocked back a run from Babar Azam, so he could take strike during the Power Surge. #BBL15 pic.twitter.com/rTh0RXE0A5
ஸ்மித் அதிரடியாக சிக்ஸர்களை பறக்கவிட, 47 ஓட்டங்களில் இருந்த பாபர் அஸாம் (Babar Azam) தொடர்ச்சியாக பந்துகளை டாட் செய்தார்.
கடைசி பந்தில் அவர் ஒரு ரன் எடுக்க அழைக்க ஸ்மித் வேண்டாம் என்று நின்றுவிட்டார். அடுத்த ஓவரில் ஸ்மித் சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
பின்னர் மெக்ஆண்ட்ரூ ஓவரில் பாபர் அஸாம் 47 (39) ஓட்டங்களில் போல்டு ஆனார். அவர் ஆடுகளத்தை விட்டு வெளியேறும்போது பவுண்டரி எல்லையை துடுப்பால் அடித்து கோபத்தை வெளிப்படுத்தினார்.
பாபரின் இந்த செயல் கடுமையான விமர்சனங்களை பெற்றுள்ளது. மேலும், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |