அதிரடியை தொடங்கிய பாபர் அஸாமை அவுட்டாகிய ஹர்திக்! குறிவைத்து ஸ்டம்பை தாக்கிய அக்ஷர் படேல்
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.
பாபர் அஸாம் அவுட்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி துபாயில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து முதலில் களமிறங்கியுள்ளது.
நிதானமாக ஆட்டத்தை தொடங்கிய பாபர் அஸாம், ஒரு கட்டத்தில் பவுண்டரிகளை விரட்ட ஆரம்பித்தார்.
ஆனால், ஹர்திக் பாண்ட்யா வீசிய ஓவரில் பாபர் அஸாம் (Babar Azam) விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 23 ஓட்டங்கள் எடுத்தார்.
அக்ஷர் படேல்
அடுத்த ஓவரிலேயே பொறுமையாக ஆடிக்கொண்டிருந்த இமாம் உல் ஹக் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
மிட் ஆனில் அடித்துவிட்டு ரன் எடுக்க ஓடியபோது, அக்ஷர் படேல் குறிவைத்து ஸ்டம்பை அடித்து ரன்அவுட் செய்தார்.
இதனால் 26 பந்துகளில் 10 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |