பாபர் அஸாம் மீண்டும் பாகிஸ்தான் கேப்டனாக நியமனம்
பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பாபர் அஸாம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஷான் மசூத் நீக்கம்
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களுக்கு பாகிஸ்தானின் டெஸ்ட் கேப்டனாக பாபர் அஸாம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் ஆடவர் தேசிய தேர்வுக்குழு ஷான் மசூதை நீக்கி, பாபரை கேப்டனாக நியமித்த இந்த முடிவினை அறிவித்தது.
வங்காளதேசத்தில் நடைபெற்ற தொடரில் பாகிஸ்தான் அணி 0-2 என்ற கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்தது.
ஷான் மசூத் (Shan Masood) 2023-24 சீஸனில் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, 16 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்றுத் தந்தார். 12 தோல்விகளை அவரது தலைமையிலான அணி சந்தித்தது.
பாபர் அஸாம்
இதற்கிடையில், பாபர் அஸாம் டெஸ்ட் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்பது இரண்டாவது முறையாகும்.
2021 முதல் 2023 வரை அவர் அணியை வழிநடத்தியபோது, பாகிஸ்தான் விளையாடிய 20 போட்டிகளில் 10யில் வெற்றி பெற்றது.
ஆனால், 2023 ஒருநாள் உலகக்கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் அணி மோசமாக செயல்பட்டதைத் தொடர்ந்து அவரது பதவி பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |