பாபர் அஸாமின் அதிரடியில் சிட்னி சிக்ஸர்ஸ் அபார வெற்றி
பிக் பாஷ் லீக் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனெக்ட்ஸை வீழ்த்தியது.
பிரவுன் 43 ஓட்டங்கள்
டாக்லேண்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் மெல்போர்ன் மற்றும் சிட்னி அணிகள் மோதின.
Babar ignites the Power Surge with back-to-back boundaries! 🇵🇰🔥 #BBL15 pic.twitter.com/NXWsKfwhCW
— KFC Big Bash League (@BBL) January 1, 2026
முதலில் ஆடிய மெல்போர்ன் ரெனெக்ட்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ஓட்டங்கள் எடுத்தது.
ஜோஷ் பிரவுன் 19 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 43 ஓட்டங்கள் விளாசினார். ஹசன் கான் 39 ஓட்டங்கள் எடுத்தார்.
பாபர் அஸாம் 58 ஓட்டங்கள்
அப்போட் 3 விக்கெட்டுகளும், ஜேக் எட்வார்ட்ஸ், வார்ஷுய்ஸ் மற்றும் ஹெடன் கெர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் டேனியல் ஹுக்ஸ் 30 ஓட்டங்கள் எடுத்தார். ஹென்ரிக்ஸ் 23 (18) ஓட்டங்கள் விளாசினார்.

தொடக்க வீரரான பாபர் அஸாம் (Babar Azam) கடைசி வரை ஆட்டமிழக்காமல் 46 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 58 ஓட்டங்கள் விளாச, சிட்னி சிக்ஸர்ஸ் அணி 19.1 ஓவர்களில் 168 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |