'டக் அவுட்'யில் சாதனை படைத்த கேப்டன்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் இம்ரான் கானின் மோசமான சாதனையை சமன் செய்துள்ளார்.
இமாலய வெற்றி
ஆசியக் கோப்பை தொடர் 30ஆம் திகதி தொடங்க உள்ள நிலையில், பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டு வருகிறது.
நேற்று நடந்த முதல் போட்டியில் 142 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் இமாலய வெற்றி பெற்றது.
இப்போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் டக் அவுட் ஆனார். இதன்மூலம் அவர் மோசமான சாதனை ஒன்றை சமன் செய்தார்.
மோசமான சாதனை
அதாவது, பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் இம்ரான்கான், மியாண்டட், அசார் அலி மற்றும் யூனிஸ்கான் ஆகியோரின் மோசமான சாதனையை (கேப்டனாக 2 முறை டக் அவுட்) சமன் செய்துள்ளார். அதேபோல் 4 ஒருநாள் போட்டிகளில் டக் அவுட் ஆகியுள்ளார்.
வாசிம் அக்ரம் அதிகமுறை டக் அவுட் ஆன பாகிஸ்தான் வீரர் ஆவார். வாசிம் அக்ரம் (8) முதலிடத்தில் உள்ள நிலையில், இன்சமாம்-உல்-ஹக், மொயின் அலி மற்றும் மிஸ்பா-உல்-ஹக் உள்ளனர்.
Associated Press
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |