993 நாட்கள் ஆகிவிட்டது...விராட் கோலியை சீண்டிய பாகிஸ்தான் வீரர்: கொதிக்கும் இந்திய ரசிகர்கள்!
- விராட் கோலியின் ஆஃப் ஸ்டம்பு லைன் பந்துகளுக்கான பலவீனம் அம்பலமாகிவிட்டது.
- விராட் கோலி போல் பாபர் அசாம் இருக்க மாட்டார் பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவேட் கருத்து
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மாதிரியெல்லாம் 993 நாட்கள் சதமெடுக்காமல் பாபர் அசாம் தட்டுத்தடுமாற மாட்டார் என்ற தொனியில் பாகிஸ்தானின் முன்னாள் பந்து வீச்சாளர் ஆகிப் ஜாவேட் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் ரன் இயந்திரம் என அழைக்கப்படும் விராட் கோலி தனது மோசமான பார்ம் காரணமாக சதமெடுத்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன.
இது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி இருந்தாலும், கோலி தனது பழைய பார்மிற்கு திரும்புவார் என எதிர்பார்த்தும் வருகின்றனர்.
'Babar will never have rough patch like Virat Kohli':Aaqib Javed#CricketTwitter #cricketnews #viratkohli #BabarAzam
— CricInformer(Cricket News & Fantasy Tips) (@CricInformer) August 13, 2022
இந்தநிலையில் பாகிஸ்தானின் முன்னாள் ஸ்விங் பவுலர் ஆகிப் ஜாவேட் பார்க் டிவி என்ற சேனலுக்கு அளித்த பேட்டியில், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி போல் 993 நாட்கள் பாபர் அசாம் சதமெடுக்காமல் இருக்க மாட்டார் என்ற தொனியில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுத் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த கருத்தில், பிளேயர்கள் 2 வகை. முதல் வகை கிரேட் பிளேயர்கள் பார்ம் அவுட் ஆனால் அவ்வளவுதான், மீண்டு வருவதற்கு நீண்ட காலம் எடுக்கும்.
மற்றபடி உத்தி ரீதியாக சரியாக ஆடுபவர்கள். இரண்டாவது வகை, இவர்களுக்கு பார்ம் இல்லாத நாட்கள் நீண்ட காலம் இருக்காது, நீண்ட காலம் பார்ம் இல்லாமல் தவிக்கும் பட்டியலில் கேன் வில்லியம்சன், பாபர் அசாம், ஜோ ரூட் ஆகியோர் இருக்க மாட்டார்கள், இவர்களின் பலவீனங்களைக் கண்டுப்பிடிப்பது கடினம்.
ஆனால் விராட் கோலியின் ஆஃப் ஸ்டம்பு லைன் பந்துகளுக்கான பலவீனம் அம்பலமாகிவிட்டது. லட்சக்கணக்கான முறை கோலியை அந்த பலவீனத்தில் போட்டு ஜேம்ஸ் ஆண்டர்சன் அவரை களத்தை விட்டு வெளியேற்றி இருக்கிறார்.
கோலி ரன் எடுக்கவில்லை எனில் இந்தியா தோல்வியை சந்திக்கும், இப்படியிருக்கையில் ஏன் தீபக் ஹூடாவை ஆடவைக்கலாமே, அவரோ நல்ல பார்மில் இருக்கிறார் எனத் தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: ஆப்பிரிக்கா செல்லும் முதல் உணவு தானிய சரக்கு கப்பல்: உறுதிப்படுத்திய உக்ரைன்
அத்துடன் ஆசியக் கோப்பை நடைபெறும் யுஏஇயில் பார்மில் இல்லாத வீரர்கள் கூட பார்மை கண்டுப்பிடித்துக் கொள்ளலாம் இங்கு பிட்ச்கள் அப்படிப்பட்டவை எனவும் தெரிவித்தார்.