ஆப்பிரிக்கா செல்லும் முதல் உணவு தானிய சரக்கு கப்பல்: உறுதிப்படுத்திய உக்ரைன்
- ஆப்பிரிக்காவிற்கு தானியங்களை ஏற்றிச் செல்லும் முதல் சரக்கு கப்பல் உக்ரைனுக்கு வந்தடைந்தது.
- தானியங்கள் எத்தியோப்பியாவுக்கு அனுப்பப்படும் என்றும் ஐநா செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தகவல்
உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு பிறகு ஆப்பிரிக்கா நோக்கி செல்லும் முதல் தானிய கப்பல் ”பிரேவ் கமாண்டர்” கருங்கடல் துறைமுகமான பிவ்டென்னி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்து இருப்பதாக உக்ரைனின் உள்கட்டமைப்பு அமைச்சர் ஓலெக்சாண்டர் குப்ராகோவ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையை தொடர்ந்து, உலகமெங்கும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு நிவாரணம் வழங்கும் உணவு தானியங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.
The cargo ship BRAVE COMMANDER arrived at the Pivdennyi Sea Port. Very soon ?? grain will be delivered to Ethiopia ??.
— Oleksandr Kubrakov (@OlKubrakov) August 12, 2022
? supports ?? in fight against #RussianAggression & we do all possible to prevent global hunger crisis. #TogetherStronger pic.twitter.com/FL2IuwvBzx
இதனைத் தொடர்ந்து ஜூலை மாத இறுதியில் ஐ.நா மற்றும் துருக்கியின் பேச்சுவார்த்தைக்கு பிறகு உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இருநாடுகளும் உணவு தானிய ஏற்றுமதிக்கு சம்மதம் தெரிவித்தனர்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் உணவுத் தானியங்கள் துருக்கி மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில் ஆப்பிரிக்க நாட்டுக்கு தானியங்களை ஏற்றிச் செல்லும் முதல் தானிய கப்பல் கருங்கடல் துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது.
பிரேவ் கமாண்டர் என்று பெயரிடப்பட்ட கப்பல், கோதுமையை ஆப்பிரிக்காவின் ஹார்ன் ஆஃப் ஆப்ரிக்கா நாடான ஜிபூட்டிக்கு எடுத்துச் செல்லும் என்றும், அங்கு இறக்கப்பட்டு எத்தியோப்பியாவுக்கு அனுப்பப்படும் என்றும் ஐநா செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்தார்.
Reuters
உக்ரைனிய உள்கட்டமைப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, கப்பல் 23,000 டன்களுக்கு மேல் தானியங்களை ஏற்றிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதல் செய்திகளுக்கு: இலங்கைக்கு புதிய போர் விமானங்கள்...உதவிக்கரம் நீட்டும் இந்தியா
இவை உக்ரைனில் தேங்கியுள்ள 20 மில்லியன் டன் தானியங்களில் சிறு பகுதி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.