இலங்கைக்கு புதிய போர் விமானங்கள்! உதவிக்கரம் நீட்டும் இந்தியா
- இலங்கைக்கு போர் விமானங்களை வழங்குகிறது இந்தியா
- இலங்கையுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் விமானம் வழங்கப்படுவதாக தகவல்
இலங்கைக்கு இரண்டு டோர்னியர் 228 ரக ராணுவ விமானங்களை இந்தியா விரைவில் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அந்த நாட்டு மக்களை அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்கு கூட இன்னல் அடையும் நிலைமைக்கு தள்ளியுள்ளது.
மேலும் மக்கள் போராட்டத்தை தொடர்ந்து அடுத்தடுத்த அரசியல் தலைவர்களின் பதவி ராஜினாமா போன்ற காரணங்களாலும் இலங்கையில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது.
இந்தநிலையில் இந்தியாவின் இரண்டு ராணுவ விமானங்களை இலங்கைக்கு பரிசாக வழங்க இந்தியா முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கையின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரீஸ், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் ஆகியோர் சந்தித்து பேசிக் கொண்டனர்.
அப்போது இரண்டு டோர்னியர் ராணுவ விமானங்களை இந்தியாவிடம் இருந்து இலங்கை வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் 2 ராணுவ விமானங்களை வழங்குவது உறுதி செய்யப்பட்டது.
அதன் அடிப்படையிலேயே தற்போது இலங்கைக்கு இரண்டு டோர்னியர் 228 ரக ராணுவ விமானங்களை ஒரிரு நாட்களுக்குள் ஒப்படைக்கும் என தகவல் தெரியவந்துள்ளது.
இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் நிறுவனம் இந்த டோர்னியர் ராணுவ விமானத்தை தயாரித்துள்ளது. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ராணுவ விமானம் தற்போது இந்திய கடலோர காவல் படை, விமான படை மற்றும் கடற்படையின் உளவு பிரிவுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானிய பிரதமர் தேர்தல்: வெற்றி பெறும் வாய்ப்பு இவருக்குத்தான் அதிகமாம்...
அதிநவீன வசதிகள் கொண்ட இந்த விமானம் இரண்டு என்ஜின்கள் வசதி கொண்டது.