அரைசதம் அடித்த பாபர், ஷகீல்! தென் ஆப்பிரிக்காவுக்கு 271 ஓட்டங்கள் இலக்கு
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி 270 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
கேப்டன் பாபர் அசாம்
பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை போட்டி சென்னையில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பாடியது. ஷஃபிக் (9), இமாம் (12) சொற்ப ஓட்டங்களில் வெளியேற, ரிஸ்வான் 31 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.
அடுத்து வந்த இஃப்திகார் 21 ஓட்டங்களில் ஷம்சி ஓவரில் ஆட்டமிழந்தார். எனினும் பொறுப்புடன் ஆடிய கேப்டன் பாபர் அசாம் 31வது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
31st ODI half-century for @babarazam258 ?#PAKvSA | #DattKePakistani pic.twitter.com/mA6sTKgCEn
— Pakistan Cricket (@TheRealPCB) October 27, 2023
சவுத் ஷகீல் அரைசதம்
பின்னர் வந்த வீரர்களும் பொறுப்புடன் ஆடி தங்கள் பங்குக்கு ஓட்டங்கள் சேர்த்தனர். சவுத் ஷகீல் 52 ஓட்டங்களும், ஷதாப் கான் 43 ஓட்டங்களும் எடுத்தனர்.
முகமது நவாஸ் 24 ஓட்டங்கள் எடுத்து ஜென்சென் ஓவரில் அவுட் ஆனார். கடைசி விக்கெட்டாக முகமது வாசிம் 47வது ஓவரில் வெளியேற, பாகிஸ்தான் அணி 270 ஓட்டங்களில் ஆல்அவுட் ஆனது.
Excellent batting from @saudshak as he brings up his third ODI half-century ?#PAKvSA | #DattKePakistani | #CWC23 pic.twitter.com/dVvrCFxxmi
— Pakistan Cricket (@TheRealPCB) October 27, 2023
தென் ஆப்பிரிக்காவின் தரப்பில் ஷம்சி 4 விக்கெட்டுகளும், ஜென்சென் 3 விக்கெட்டுகளும், கோட்ஸி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
Twitter (@ProteasMenCSA)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |