பிரித்தானியாவில் நடுங்கவைக்கும் சம்பவம்... உயிருக்கு போராடும் பலர்: ஆபத்தில் முடிந்த விளையாட்டு
கடும் பனியால் உறைந்து காணப்பட்ட ஏரிக்குள் விழுந்து பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம்
சோலிஹல் பகுதியில் உள்ள Babbs Mill ஏரியிலேயே நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் நடந்துள்ளது. அவசர உதவிக்குழுவினர் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
@PA
பனியால் உறைந்து காணப்பட்ட ஏரியில் விளையாட்டில் ஈடுபட்ட பலர் தவறி ஏரிக்குள் விழுந்துள்ளனர் என்றே தெரியவருகிறது. நாடு முழுவதும் பனி மற்றும் பனி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு மிட்லாண்ட்ஸின் சோலிஹல் பகுதியில் வெப்பநிலை இன்று 1C என சரிவடைந்துள்ளது.
உறைந்து காணப்பட்ட ஏரியில் மக்கள் ஐஸ் விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக உயிர் உறையும் நீருக்குள் தவறி விழுந்துள்ளனர். தகவல் அறிந்து அவசர உதவிக்குழுவினரும், சிறப்பு குழுவினரும் சம்பவயிடத்திற்கு வந்து மீட்பு பணிகளில் துரிதமாக செயல்பட்டுள்ளனர்.
@PA
பலரது நிலை கவலைக்கிடம்
ஏரிக்குள் விழுந்தவர்கள் மீட்கப்பட்டு, முதலுதவி அளிக்கப்பட்டு வருகிறது. பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என பொலிஸ் தரப்பு உறுதி செய்துள்ளது. உள்ளூர் நேரப்படி 4 மணியளவில் குறித்த சம்பவம் நடந்துள்ளதாக மேற்கு மிட்லாண்ட்ஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
@PA
பிரித்தானியாவின் சில பகுதிகளில் இரவு நேரங்களில் -4C வெப்பநிலை பதிவாகியுள்ளது, மேலும் எதிர்வரும் நாட்களில் இது -10C என மோசமடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.