ஒன்றரை வயது குழந்தை கடித்ததால் உயிரிழந்த விஷப்பாம்பு! நம்பமுடியாத ஆச்சரிய சம்பவம்... புகைப்படம்
வங்கதேசத்தில் ஒன்றரை வயது குழந்தை கடித்தத்தில் விஷப்பாம்பு ஒன்று உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. உஜல்பூர் கிராமத்தில் தான் இந்த நம்பமுடியாத ஆச்சரிய சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
வீட்டில் விளையாடி கொண்டிருந்த ஒன்றரை வயது பெண் குழந்தையான Jannatul Ferdous பாம்பு ஒன்றை கடித்தத்தை அவர் தாய் பார்த்திருக்கிறார். பின்னர் உடனடியாக Jannatul மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவளுக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் மூன்று மணி நேரம் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டாள். பின்னர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார் Jannatul.
Collected
மருத்துவர்கள் கூறுகையில், குழந்தை கடித்தது விஷப்பாம்பை தான். அது என்ன வகையான பாம்பு என்பது இன்னும் தெரியவில்லை. குழந்தையை பாம்பு கடித்திருந்தால், மூன்று மணி நேர கண்காணிப்பில் சில அறிகுறிகள் தென்பட்டிருக்கும்.
ஆனால் அப்படி எதுவும் தென்படாததால் குழந்தையை வீட்டிற்கு அனுப்பிவிட்டோம் என கூறியுள்ளனர்.
Jannatulன் தாய் கூறுகையில், என் மகள் உறவினருடன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென படுக்கைக்கு அடியில் சென்றாள், சில நிமிடங்களுக்குப் பிறகு அவள் கையில் பாம்பின் துண்டிக்கப்பட்ட உடலைக் கண்டோம். அதிர்ஷ்டவசமாக, அது அவளைக் கடிக்கவில்லை, காயமின்றி தப்பினாள் என கூறியுள்ளார்.