ஜேர்மன் நதியொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தையின் உடல்: சோகத்தை உருவாக்கியுள்ள செய்தி
ஜேர்மன் நதியொன்றில் ஆறு வயது சிறுவன் ஒருவனின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் சோகத்தை உருவாக்கியுள்ளது.
சோகத்தை உருவாக்கியுள்ள செய்தி
ஜேர்மனியிலுள்ள Rhine நதியில் கிளை நதியான Lahn நதியில், ஆறு வயதுச் சிறுவன் ஒருவனுடைய உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விடயம் என்னவென்றால், Weilburg என்னுமிடத்தைச் சேர்ந்த பவ்லோஸ் (Pawlos, 6) என்னும் சிறுவன் மார்ச் மாதம் 25ஆம் திகதி பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது காணாமல் போனான்.
பவ்லோஸ் காணாமல் போனபோது, அவனைத் தேடுவதற்காக, ஜேர்மன் விமானப்படை விமானம் ஒன்று கூட தேடும் பணியில் ஈடுபட்டது. ஆனாலும், அவனைக் கண்டுபிடிக்கமுடியவில்லை.
இந்நிலையில், Lahn நதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உடல் பவ்லோஸுடைய உடலாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கிறார்கள்.
சிறுவன் பவ்லோஸ், ஆட்டிஸக் குறைபாடு கொண்ட குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |