குரங்கு பொம்மையால் பறிபோன குழந்தையின் உயிர்: கடும் துயரத்தில் பெற்றோர்
Hughie Mcmahon(1) என்ற ஆண் குழந்தை விளையாட்டு பொம்மையில் உள்ள பேட்டரியை முழுங்கியதால், இதயத்தில் துளை ஏற்பட்டு உயிரிழந்துள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Christine McDonald (32) மற்றும் Hugh McMahon (29) என்ற தம்பதியின் Mcmahon(1) என்ற ஆண் குழந்தை, Vtech நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஸ்விங் அண்ட் சிங் என்ற குரங்கு பொம்மையில் உள்ள சிறிய LR44 ரக பேட்டரியை முழுங்கியுள்ளான்.
இதை சுதாரித்து கொண்ட பெற்றோர், Mcmahonனை உடனடியாக wishaw மருத்துவ பல்கலைகழக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். Mcmahonக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் அவரது இரத்தத்தில் அமிலத்தனமாய் அதிகரித்து விஷத்தன்மை கூடி இருப்பதாகவும், இரத்தம் இன்னும் உறையவில்லை என தெரிவித்துள்ளனர்.
ஆனால் இறுதியில் வெளியான மருத்துவ அறிக்கையில் Mcmahon உட்கொண்ட அந்த பேட்டரி தொண்டை பகுதியில் சிக்கி எரிந்து அவரது இதயத்தில் ஒரு துளையை ஏற்படுத்தியுள்ளதாக கண்டுபிடித்தனர். இறுதியில் மருத்துவ உதவி கொண்டே Mcmahon இன்னும் உயிருடன் இருப்பதாக Christine McDonald (32) மற்றும் Hugh McMahon (29) தெரிவிக்கவே இருவரும் அந்த கடினமான முடிவை எடுக்க ஒத்துக்கொண்டனர்.
இந்த நிலையில் இந்த பேட்டரிகளை பற்றி யாரும் இதுவரை எங்களை எச்சரிக்கவில்லை, Mcmahon படிகட்டுகள் அருகில் செல்லாமல் இருந்ததை உறுதி செய்த நாங்கள், இதை கவனிக்காமல் விட்டுவிட்டோம். என் மகன் எங்களை விட்டு சென்றுக்கொண்டு இருக்கிறான். இது மிகவும் வேதனை தருகிறது, இப்பொது என் நெஞ்சில் உள்ள வழியை யாராலும் புரிந்துகொள்ள முடியாது என Mcmahon தாயார் Hugh McMahon கண்ணீர்மல்க பேசினார்.
மேலும் எங்கள் மகன் இறப்பிற்கு காரணமான Vtech நிறுவனத்தை மூடவேண்டும் வேண்டும் என்றும் அதற்காக நாங்க போராடுவோம் எனவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து Vtech நிறுவனத்திடம் தொடர்பு கொண்ட போது அவர்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.
ஆனால் Mcmahon பேட்டரியை விழுங்கியதாக சொன்ன ஸ்விங் அண்ட் சிங் என்ற குரங்கு பொம்மையின் எச்சரிக்கை குறிப்பில் " இது சிறியவகை பேட்டரிகளால் இயங்க கூடியது, இதை சிறுவர்கள் உட்கொண்டால் உடனடியாக மருத்துவனைக்கு செல்லுமாறும், இது அதிக சேதத்தை ஏற்படுத்த கூடியது எனவும் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.