கடற்கரையில் ஓடித்திரியும் குட்டி டைனோசர்கள்! இணையத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய வீடியோ
குட்டி டைனோசர்கள் கடற்கரையில் ஓடுவதைப் போன்ற வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ ட்விட்டரில் Buitengebieden என்ற ஐடியில் பகிரப்பட்டுள்ளது. அதில், இந்த விடியோவை புரிந்துகொள்ள தனக்கு சில வினாடிகள் தேவைப்பட்டதாக பதிவிடப்பட்டுள்ளது.
வீடியோவில் ஓடும் உயிரினங்கள் நீண்ட கழுத்து கொண்ட Sauropoda வகை டைனோசர்கள் கடலை நோக்கி ஓடுவது போல் காட்சியளிக்கிறது. 14 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ ட்விட்டர் பயனர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால் உற்றுப்பார்த்தால அது உண்மையில் டைனோசர்கள் இல்லை என்பது தெரியவரும். சில பயனர்கள் அதனை பார்த்ததும் கண்டுபிடித்தனர். இந்த வீடியோ ரிவர்ஸ் செய்யப்பட்டுள்ளது.
அது உண்மையில் கோடிமுண்டிஸ் அல்லது கோடிஸ் (Coatis/ coatimundis) என்று அழைக்கப்படும் Procyonidae குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகள் ஆகும். அவை தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் தென்மேற்கு அமெரிக்காவைச் சேர்ந்த பாலூட்டிகளாகும்.
This took me a few seconds.. ? pic.twitter.com/dPpTAUeIZ8
— Buitengebieden (@buitengebieden) May 4, 2022
இந்த வீடியோ ட்விட்டரில் 14 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 51,000-க்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. ஒரு வயதுவந்த கோட்டிகளின் அளவு 33 முதல் 69 செமீ (13 முதல் 27 அங்குலம்) வரை தலை முதல் வால் நுனி வரை இருக்கும், அவை அவற்றின் உடல்கள் வரை நீளமாக இருக்கும்.
கோட்டிஸ் ஒரு பெரிய வீட்டுப் பூனையின் அளவு, தோளில் சுமார் 30 செமீ (12 அங்குலம்) உயரமும், 2 முதல் 8 கிலோ (4.4 மற்றும் 17.6 பவுண்டு) எடையும் கொண்டது.
மேலும், கோட்டிஸ் - ரக்கூன்கள் மற்றும் கரடிகள் போன்ற போன்ற பாதங்களைக் கொண்டுள்ளன, மேலும் அவை மனிதர்களை போல உள்ளங்கால்களில் நடக்கக்கூடியவை.