நூடுல்ஸ் உணவில் உயிருடன் மிதந்த குட்டி எலி: ஆர்டர் செய்த பெண்ணிற்கு அதிர்ச்சி: வைரல் வீடியோ
உணவகம் ஒன்றில் இருந்து வாங்கப்பட்ட நூடுல்ஸ் பார்சலில் குட்டி எலி ஒன்று உயிருடன் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உணவில் உயிருடன் கிடந்த எலி
ஹாங்காங்கின் குவாய் சுங் பகுதியில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் மதிய உணவிற்காக திங்கட்கிழமை அப்பகுதியில் இருந்த “வா ஜெர்” என்ற உணவகத்தில் இருந்து சாத்தே பீப் நூடுல்ஸ் உணவை ஆர்டர் செய்துள்ளார்.
சுமார் 10 சதவீத தள்ளுபடியுடன் ரூ. 530க்கு இந்த உணவை அவர் வாங்கியுள்ளார்.
ஆர்டர் செய்யப்பட்ட அந்த உணவை வாங்கிக் கொண்டு, சாப்பிடுவதற்காக அந்த உணவை திறந்த போது அதில் சிறிய எலி ஒன்று உயிருடன் நெளிவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து அந்த பெண் உடனடியாக உணவு மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரத்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
உணவகம் அளித்த விளக்கம்
இந்த சம்பவம் மிகவும் பயங்கரமான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட சம்பவமாக தெரிகிறது. கடந்த ஓராண்டாக இந்த உணவகத்தை நடத்தி வருகிறோம். இதுவரை எலி அல்லது பூச்சிகள் தொடர்பான புகார் எதுவும் வந்தது இல்லை என்று உணவகத்தின் உரிமையாளர் மைக் தெரிவித்துள்ளார்.
இது தொழிற்பேட்டை என்பதால் எப்போதாவது எலிகள் இங்கு நடமாடுவது உண்டு. அதனால் நாங்கள் மாதந்தோறும் உணவகத்தில் ஆழமான துப்புரவு மற்றும் கிருமிநாசினி பணிகளை செய்து வருவதாக விளக்கமளித்துள்ளார்.
மேலும் இதனை யாரும் குறும்பாக செய்து இருக்கவும் வாய்ப்பில்லை, இனி வரும் காலங்களில் பூச்சு கட்டுப்பாடு நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Customer finds NEWBORN MOUSE in noodle dish in Hong Kong pic.twitter.com/jGMxCKcrbB
— RTVisual (@RT_Visual_on_X) September 8, 2026
இணையத்தில் வைரலான விவகாரம்
இந்த சம்பவம் தொடர்பாக இணையத்தில் வெளியான 18 வினாடிகள் கொண்ட வீடியோ வைரலாகி உள்ளது.
மசாலா சாஸுக்குள் குட்டி எலி ஒன்று கை, கால்களை அசைத்து கொண்டு இருப்பது நெட்டிசன்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |