கொலம்பியா நிலநடுக்கம்: 48 மணி நேரம் கழித்து பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்பு
Newborn baby rescued alive Colombia Earthquake: கொலம்பியா நிலநடுக்க இடிபாடுகளிலிருந்து பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
கொலம்பியாவின் காலி நகரில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நாட்டின் மேற்கு பகுதியை பெரிதும் பாதித்தது. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது
இந்த பேரழிவின் மூன்றாவது நாளில், லா டோரஸ் டெல் லிமோனார் என்ற ஐந்து மாடி குடியிருப்பு கட்டிடம் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஒரு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.
மீட்பு நடவடிக்கையின் போது, பிரையன் ஒசோரியோ சுலுவாகா என்ற இளைஞர், இடிபாடுகளின் அருகே சென்றபோது, “யாராவது உள்ளீர்களா?” என்று சத்தமாக கத்தியுள்ளார்.
🚨JUST IN: A newborn baby and his mother have been pulled alive from the rubble in Cali, Colombia—a symbol of hope amid the devastation of the 7.4-magnitude earthquake. The infant, just days old, survived the collapse of a five-story building.
— Qeeb (@Qeeb_1) August 11, 2026
At least 132 dead and 570 injured…
அப்போது இடிபாடுகளுக்குள் இருந்து மெலிந்த குரல் ஒன்று கேட்டது: “ஆம், நான் இங்கே இருக்கிறேன். என்னுடன் ஒரு குழந்தை இருக்கிறது.” என்று கேட்டது.
இந்த குரலைக் கேட்டதும், மீட்புக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் கைகளால் கற்கள், சிமெண்டு துண்டுகளை அகற்றத் தொடங்கினர். அவர்களின் பாதையை ஒரு பெரிய கான்கிரீட் தகடு மறித்திருந்தது. முதலில் அதை தூக்க முடியவில்லை. பின்னர் அனைவரும் சேர்ந்து “ஒன்று, இரண்டு, மூன்று” என்று கூச்சலிட்டு தூக்கினர்.
சுவாசிக்கத் தொடங்கிய குழந்தை
அப்போது குழந்தையின் தலையை அவர்கள் கண்டனர். சுவாசிக்க முடியாமல், ஊதா நிறத்தில் மாறியிருந்த குழந்தை, இடிபாடுகளை அகற்றியதும் சுவாசிக்கத் தொடங்கியது. அதன் நிறம் மீண்டும் இயல்பாக மாறியது.
வீடியோவில், தூசி படிந்திருந்த குழந்தையை கவனமாக வெளியே எடுத்து, காவல்துறையினர் ஆம்புலன்ஸுக்கு எடுத்துச் சென்ற காட்சி பதிவாகியுள்ளது.
அருகில், காயமடைந்த ஒரு மனிதர் இன்னும் சிக்கியிருந்தார். பின்னர் அவரையும் மீட்புக் குழுவினர் மீட்டனர்.
இந்த சம்பவம், பேரழிவின் நடுவிலும், ஒரு குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டிருப்பது நம்பிக்கையின் ஒளியாக பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |