பஹ்ரைனில் ஏவுகணைத் தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா... ஈரான் அல்ல: விசாரணையில் அம்பலம்
ஈரான் போர் தொடங்கி பத்தாவது நாளில், பஹ்ரைன் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஈரான் மீது பழி
மார்ச் 9 ஆம் திகதி நடந்த இந்த தாக்குதல் தொடர்பில் பஹ்ரைனும் அமெரிக்காவும் ஈரான் மீது பழி சுமத்தி இருந்தது. குறித்த தாக்குதல் சம்பவத்தில் சிறார்கள் உட்பட 39 பேர்கள் காயங்களுடன் தப்பியிருந்தனர்.

சம்பவத்தன்று அமெரிக்க மத்திய கட்டளை மையம் தங்களின் சமூக ஊடக பக்கத்தில், பஹ்ரைனில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதி மீது ஈரானிய ட்ரோன் தாக்குதல் நடந்துள்ளதாக தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விக்கு முதல் முறையாக பஹ்ரைன் விளக்கமளித்துள்ளது.
ஒப்புக்கொண்டது
சித்ரா தீவில் உள்ள மஹஸ்ஸா குடியிருப்புப் பகுதிக்கு மேலே நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்தில் பேட்ரியாட் ஏவுகணைக்குத் தொடர்பு இருந்ததை பஹ்ரைன் சனிக்கிழமை அன்று முதன்முறையாக ஒப்புக்கொண்டது.
உண்மையில் ஈரான் ட்ரோன் தாக்குதல் நடந்ததாகவும், அதை முறியடிக்க நடத்தப்பட்ட பேட்ரியாட் ஏவுகணைத் தாக்குதலானது அசம்பாவிதத்திற்கு காரணமானது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மஹஸ்ஸா சம்பவத்தில் ஈரானிய ட்ரோன் ஈடுபட்டதற்கான ஆதாரத்தை பஹ்ரைனோ அல்லது அமெரிக்காவோ இதுவரை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |