சிக்ஸர் மழை பொழிந்த இருவர்! மரண அடி வாங்கிய நியூசிலாந்து
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ருத்ரதாண்டவம் ஆடிய பேர்ஸ்டோவ், புரூக்
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி மான்செஸ்டரில் நடந்தது.
முதலில் ஆடிய இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவ், ஹரி புரூக் சிக்ஸர்களை விளாசினர். இதன்மூலம் ஜெட் வேகத்தில் இங்கிலாந்தின் ஸ்கோர் உயர்ந்தது.
Bairstow goes BIG! ? #EnglandCricket | #ENGvNZ pic.twitter.com/2HX70Qp2zv
— England Cricket (@englandcricket) September 1, 2023
புரூக் 36 பந்துகளில் 67 ஓட்டங்கள் (5 சிக்ஸர், 5 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார். எனினும் பேர்ஸ்டோவ் ஆட்டமிழக்காமல் 60 பந்துகளில் 4 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 86 ஓட்டங்கள் குவித்தார்.
இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 198 ஓட்டங்கள் எடுத்தது. இஷ் சோதி 2 விக்கெட்டுகளும், சான்ட்னர் மற்றும் சௌதீ தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
Just Harry Brook things...
— England Cricket (@englandcricket) September 1, 2023
Smashing a SIX to get to your 50! ?
??????? #ENGvNZ ?? | @IGcom pic.twitter.com/4ek9yTWR7X
நியூசிலாந்து படுதோல்வி
அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி அட்கின்ஸன், அடில் ரஷித் பந்துவீச்சில் நிலைகுலைந்தது. டிம் செய்பெர்ட் (39), பிலிப்ஸ் (22), மார்க் சாப்மேன் (15) ஆகியோர் தவிர ஏனைய வீரர் ஒற்றை இலக்கங்களில் அவுட் ஆகினர்.
இதனால் 13.5 ஓவர்களில் நியூசிலாந்து அணி 103 ஓட்டங்களுக்கு சுருண்டது. அட்கின்ஸன் 4 விக்கெட்டுகளும், அடில் ரஷித் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
What a moment for Gus Atkinson ?
— England Cricket (@englandcricket) September 1, 2023
His first IT20 wicket! 1️⃣#EnglandCricket | #ENGvNZ pic.twitter.com/D8Lx44paba
Oli SCARFF
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |