இலங்கையின் தேசிய கீதம் உலகிலேயே நீளமானதா? இங்கிலாந்து வீரர் கிண்டல் கேள்வி.. அசத்தலாக பதில் கொடுத்த நபர்
இலங்கையின் தேசிய கீதம் நீளமாக இருக்கிறதோ என கேள்வி எழுப்பிய ஜானி பேர்ஸ்டோவ்
தேசத்தின் அழகையும், இலங்கையர்களின் குணங்களை தேசிய கீதம் விவரிப்பதாக பதிலடி கொடுத்த இலங்கையர்
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜானி பேர்ஸ்டோவ்வின் கேள்விக்கு இலங்கை நபர் ஒருவர் பதில் அளித்துள்ளார்.
இலங்கை தேசிய கீதம் குறித்து சமூக வலைதளப் பக்கமான ட்விட்டரில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜானி பேர்ஸ்டோவ் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
அவரது பதிவில், 'இலங்கை தேசிய கீதம் உலகிலேயே மிக நீளமானதா? சிலருக்கு ஆங்கிலத்தின் 1 வசனம் நினைவில் இல்லை, இரண்டாவது தெரியாது! பெரும் முயற்சி!' என கூறியுள்ளார்.
Is the Sri Lanka National Anthem the longest in the world?
— Jonny Bairstow (@jbairstow21) October 29, 2022
Some people can’t remember 1 verse of the English and don’t know the second! ? great effort!
TWITTER/ECB
கிண்டல் செய்யும் விதமாக உள்ள அவரது பதிவுக்கு பலரும் தங்கள் பதிலை கூறி வரும் நிலையில், இலங்கை நபர் ஒருவர் நிதானமாக கருத்து பதிவிட்டுள்ளார்.
குறித்த நபர் தனது பதிவில், 'உலகில் இல்லை, ஆனால் கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் இலங்கையில் மிக நீளமான கீதமாக இருப்பதாக நான் நினைக்கிறேன். ஆனால் உங்களுக்கு அந்த மொழி (சிங்களம்) அது நீளமானதாக இருப்பதாக நீங்கள் உணரமாட்டீர்கள். முதல் பாதி தேசத்தின் அழகை விவரிக்கிறது. இரண்டாம் பாதி இலங்கையர்களின் குணங்களை விவரிக்கிறது(வீரம், விஸ்வாசம் போன்றவை)' என தெரிவித்துள்ளார்.
Not in the world but among the cricketing nations i guess SL has the longest anthem but if you know the language(sinhala) then it won't feel that long
— Arafath Lafeer ?? (@Arft_02) October 29, 2022
First half it describes the beauty of the nation, the second half describes the qualities of lankans(heroism, loyalty etc)