Bajaj Freedom 125 CNG பைக்கின் விலை ரூ.10,000 குறைப்பு
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அதன் புதிய Freedom 125 CNG பைக்கின் விலையை ரூ.10,000 வரை குறைத்துள்ளது.
இந்த பைக்கின் base drum variant மற்றும் mid-spec drum LED variant-க்கு ரூ.10,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், டாப் வேரியண்ட்டின் விலை இன்னும் ரூ .1.10 லட்சமாக வைக்கப்பட்டுள்ளது.
விலை குறைப்புக்குப் பிறகு, அதன் விலை ரூ. 89,997 முதல் 1.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது.
பஜாஜ் நிறுவனம் உலகின் முதல் சிஎன்ஜி பைக்கின் விலையை 6 மாதங்களுக்குள் குறைத்துள்ளது.
பஜாஜ் ஃப்ரீடம் 125 மோட்டார்சைக்கிள் கடந்த ஜூலை 5-ஆம் திகதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
பைக்கை இயக்க இரண்டு எரிபொருள் விருப்பங்கள் உள்ளன, அதாவது 2 லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் 2 கிலோ சிஎன்ஜி டேங்க்.
இரன்டையும் சேர்த்து, அவை 330 கிமீ மைலேஜ் பெறும் என நிறுவனம் கூறுகிறது.
இந்த பைக்கை ஓட்டும் ரைடர் ஒரு பொத்தான் மூலம் CNG-யிலிருந்து பெட்ரோலுக்கும், பெட்ரோலிலிருந்து சிஎன்ஜிக்கும் மாறலாம்.
இந்த பைக்கின் 11-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 10 டன் எடை கொண்ட லாரி கீழே விழுந்தபோதும் டேங்கில் கசிவு ஏற்படவில்லை.
சிஎன்ஜி இருசக்கர வாகனத்தை இயக்க ஒரு கிலோ மீட்டருக்கு சுமார் ரூ .1 செலவாகும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |