சினிமாவில் 50 ஆண்டுகள்., நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவை கௌரவித்த World Book of Records UK
சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததற்காக தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவை பிரித்தானிய உலக சாதனை புத்தகம் கௌரவித்துள்ளது.
நந்தமுரி பாலகிருஷ்ணாவிற்கு World Book of Records UK நிறுவனம் Gold Edition விருதை அறிவித்துள்ளது.
இந்த விருதைப் பெறும் முதல் தெலுங்கு நடிகராகவும், இந்திய சினிமாவின் வரலாற்றில் முக்கிய அத்தியாயமாகவும் இது அமைந்துள்ளது.
1974-ல் ததம்மா கலா என்ற திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய பாலகிருஷ்ணா, இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த சாதனையை அவரது மகள் பிரம்மாணி நாரா சமூக ஊடகங்களில் பகிர்ந்து பெருமிதம் தெரிவித்தார்.
அவரது பதிவில், "50 ஆண்டுகள் முன்னணி கதாநாயகனாக இருந்த என் தந்தைக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. நீங்கள் இயற்கையின் உண்மையான சக்தி, திரையில் ஒரு நட்சத்திரம், அதற்கு வெளியே கருணை மிக்க தலைவர்...," என குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் நந்தமுரி பாலகிருஷ்ணாவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணாவிற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Nandamuri Balakrishna World Record, Balakrishna 50 years in cinema, Telugu actor honoured UK, Balakrishna Gold Edition award, Balakrishna Padma Bhushan 2025, Balakrishna Akhanda 2 Thaandavam, Balakrishna daughter Brahmani, Chandrababu Naidu Balakrishna tribute, Indian cinema milestones, World Book of Records Telugu actor