35 வயதில் நேபாளத்தின் இளம் பிரதமராக பதவியேற்ற ராப் பாடகர்
35 வயதில் நேப்பாளத்தின் இளம் பிரதமராக முன்னாள் ராப்பர் பாலன் ஷா பதவியேற்றுள்ளார்.
நேப்பாளத்தில் கடந்த ஆண்டு ஊழல் எதிர்ப்பு போராட்டங்களில் அரசு கவிழ்ந்ததைத் தொடர்ந்து, நடைபெற்ற தேர்தலில், ராப் பாடகராக (Rapper) இருந்து அரசியல்வாதியாக மாறிய பாலேந்திர ஷா பெரும் வெற்றி பெற்றார்.
பாலன் ஷா, 35 வயதில் பிரதமராக பதவியேற்றதால், நேபாள வரலாற்றில் இளம் தலைவராக உயர்ந்துள்ளார்.
பதவியேற்பு விழாவில் நேபாள ஜனாதிபதி ராம் சந்திர பவுடேல் அவருக்கு சத்தியப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த விழாவில் இந்து மத குருக்கள் மற்றும் புத்த பிக்குகள் மந்திரங்கள் ஓதிய நிலையில் பார்மபரிய முறையில் வ்விகழ்ச்சி நடைபெற்றது.
பதவியேற்பு உரையில், பாலன் ஷா, "நான் நாட்டுக்கும் மக்களுக்கு விசுவாசமாக இருந்து, அரசியலமைப்பை மதித்து, பிரதமாராக என் கடமைகளை நிறைவேற்றுவேன்" என உறுதியளித்தார்.
அவர் கருப்பு உடை மற்றும் தனது அடையாளமான கருப்பு கண்ணாடியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
ஊழல் எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பிறகு மக்கள் ஆதரவைப் பெற்றவர் பாலன் ஷா. அவரது வெற்றி, நேபாள இளைஞர்களின் அரசியல் பங்கேற்பை வலுப்படுத்தும் என நம்பப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Balen Shah Nepal PM, Youngest Prime Minister Nepal, Nepal politics 2026, Anti-corruption protests Nepal, Ram Chandra Poudel oath, Nepal youth leader Balen Shah #BalenShah #NepalPM #YoungestPM #NepalPolitics #AntiCorruption #NepalYouth #WorldNews