உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யாவிடம் இருந்து மின்சாரம் வாங்கி வந்த மூன்று ஐரோப்பிய நாடுகள், ஒரேயடியாக உறவைத் துண்டித்து வெளியேறியுள்ளது.
வரலாற்று முக்கியத்துவம்
பால்டிக் நாடுகளான எஸ்தோனியா, லாத்வியா மற்றும் லிதுவேனியா ஆகிய மூன்று நாடுகளே தற்போது ரஷ்யாவை புறக்கணித்து ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து மின்சாரம் வாங்க முடிவு செய்துள்ளது.
இதனையடுத்து இரண்டு நாள் செயல்முறையானது சனிக்கிழமை காலை தொடங்கியது. இதனால் குடியிருப்பாளர்கள் தங்கள் அலைபேசி உள்ளிட்ட சாதனங்களை சார்ஜ் செய்து கொள்ளவும், உணவு மற்றும் தண்ணீரை சேமித்து வைக்கவும்,
கடுமையான வானிலை முன்னறிவிக்கப்பட்டால் தயாராக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை லிதுவேனியாவின் தலைநகரில் நடக்கும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விழாவில் இந்த மாற்றம் அமுலுக்கு வரும்.
பெலாரஸ், ரஷ்யா, எஸ்தோனியா, லாத்வியா, லிதுவேனியா ஆகிய நாடுகளுக்கு மின்சாரம் வழங்கும் Brell grid-ஐ ரஷ்யாவே கட்டுப்படுத்தி வந்துள்ளது. தற்போது ரஷ்யாவுடனான கருத்துவேறுபாடு காரணமாக வெளியேறும் இந்த மூன்று நாடுகளும் சுமார் 24 மணிநேரம் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும்,
பால்டிக் சென்ட்ரி
அதாவது தங்களின் சேமிப்பில் இருக்கும் மின்சாரம் மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளது. அதன் பின்னர் போலந்து வழியாக ஐரோப்பிய மின்சார சேவையை பெற உள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பே 543 மைல் நீளமுள்ள (874 கி.மீ) எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இந்த மூன்று பால்டிக் நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பதட்டத்தை அதிகரிக்க செய்தது.
இந்த மூன்று நாடுகளும் ரஷ்யாவால் அடிக்கடி துன்புறுத்தப்பட்டு வந்ததுடன், எப்போது வேண்டுமானாலும் ரஷ்யாவால் தாக்கப்படலாம் என்ற சூழலும் உருவானது.
கடந்த 18 மாதங்களில், பால்டிக் கடலுக்கு அடியில் இயங்கும் குறைந்தது 11 கேபிள்கள் சேதமடைந்துள்ளன. இந்த விவகாரத்தில் நேட்டோ ரஷ்யாவைக் குற்றம் சாட்டவில்லை, ஆனால் பால்டிக் சென்ட்ரி என்ற பெயரில் ஒரு புதிய ரோந்துப் பணியை அந்தப் பகுதியில் தொடங்குவதன் மூலம் பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |