உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்: பால்டிக் நாடுகள், பின்லாந்திற்கு வான்வழி எச்சரிக்கை
Baltics and finland issue air alerts for ukraine's strike: உக்ரேனிய ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவில் இருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் மேற்குப் பகுதியான ஸ்மோலென்ஸ்க் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட உக்ரேனிய ட்ரோன் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர்.
உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
ரஷ்யாவின் மேற்குப் பகுதியான ஸ்மோலென்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இருவர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், நாட்டின் வடக்குப் பகுதியில் நடத்தப்பட்ட பிற தாக்குதல்களில் பல தொழிலாளர்கள் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பிராந்திய ஆளுநர் வசிலி அனோகின் கூறுகையில், "Yartsevo நகரில் ட்ரோன் சிதைவுகள் குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது விழுந்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர்" என்றார்.
ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் தானிய ஏற்றுமதிக்கான முக்கிய மையமாக விளங்கும் Ust-Luga துறைமுகத்தில், தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை
அதேபோல், வடபகுதியில் Murmansk பிராந்தியத்தில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள முக்கிய விமான நிலையத்தில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. உக்ரைனும், ரஷ்யாவும் இரவு முழுவதும் தாக்குதல்களைப் பரிமாறிக்கொண்டிருந்தன.
அச்சமயம் ரஷ்யா மற்றும் பெலாரஸில் இருந்து அடையாளம் தெரியாத ட்ரோன் விமானங்கள் தங்கள் வான்வெளிக்குள் நுழைந்ததாலோ அல்லது நெருங்கியதாலோ எஸ்டோனியா, லாட்வியா மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகள் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுத்தன.
மேலும், பின்லாந்து கிழக்கு மற்றும் வளைகுடாவில் பகுதி வான்வெளி மற்றும் கடல்சார் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது. ஆனால் புதன்கிழமை காலை அவற்றை பின்லாந்து நீக்கியது.
