மூங்கிலை இப்படியும் பயன்படுத்தலாமா? இயற்கை குழாயாக மாற்றி அசத்தும் கிராம மக்கள்! வைரல் வீடியோ
இந்தியாவை சேர்ந்த கிராமம் ஒன்றில் மூங்கிலை, தண்ணீர் குழாய் போல பயன்படுத்தி வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மூங்கில் சுமார் 59 நாட்கள் வரை உயிர் வாழும். மூங்கில் மரங்கள் தான் உயிர்வாழும் காலங்களில் தனக்குள் நீரை சேகரித்து வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டவை ஆகும்.
அத்தகைய மூங்கிலை பயன்படுத்தி கிராம மக்கள் புதிதாக ஒன்றை உருவாக்கியுள்ளனர். நாகலாந்து மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மூங்கிலை தண்ணீர் குழாய் போல பயன்படுத்தி வருகின்றனர்.
தனது வாழ்நாட்களை முடித்துக்கொண்ட மூங்கிலை கொண்டு வந்து ஊரில் பொதுவாக கை, கால்களை சுத்தம் செய்யப்பட்டுள்ள இடத்தில் அதனை வைத்து அதற்குள் நீரை செலுத்தி அங்கங்கே சிறுசிறு துளைகள் இட்டு, அதனை அடைத்து வைக்கவும் மரக்குச்சிகளை சொருவி பயன்படுத்தி வருகின்றனர்.
Story worth sharing pic.twitter.com/J74HvbXZBE
— Susanta Nanda IFS (@susantananda3) January 14, 2022
கை, கால்களை சுத்தம் செய்ய விரும்பும் நபர் அடைப்பை எடுத்துவிட்டு கைகளை சுத்தப்படுத்தி பின்னர் அதனை அடைத்து வைத்துக்கொள்ளலாம்.
பெரும்பாலும் இதுபோன்ற மூங்கில் குழாய் திருமணம் மற்றும் பிற பண்டிகை காலத்தில் உபயோகம் செய்யப்படுவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இயற்கையின் தோழன் என்று கூறுவதோடு மட்டுமல்லாமலால் கிராமத்தினர் எடுத்துள்ள முயற்சி மிகவும் வரவேற்கத்தக்கது.  
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        