சுப்மன் கில்லின் மிரட்டல் சதம் வீண்! வங்கதேசத்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்த இந்திய அணி
கொழும்பில் நடந்த ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்திடம் தோல்வியுற்றது.
கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய ஷகிப்
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பில் நடந்தது. முதலில் ஆடிய வங்கதேச அணி 265 ஓட்டங்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷகிப் அல் ஹசன் 80 ஓட்டங்களும், டௌஹிட் ஹிரிடோய் 54 ஓட்டங்களும் எடுத்தனர்.
Twitter (@BCBtigers)
ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு இரண்டாவது பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
கேப்டன் ரோகித் சர்மா ஓட்டங்கள் எடுக்காமல் டன்ஸிம் ஹசன் ஓவரில் அவுட் ஆனார். அடுத்து திலக் வர்மா 5 ஓட்டங்களிலும், கே.எல்.ராகுல் 19 ஓட்டங்களிலும் வெளியேறினர். இஷன் கிஷனை 5 ஓட்டங்களில் மெஹிதி ஹசன் மிராஸ் வெளியேற்றினார்.
Twitter (@BCBtigers)
கில் அபார சதம்
இதனால் இந்திய அணி தடுமாறிய நிலையில் தொடக்க வீரர் சுப்மன் கில் அதிரடியில் மிரட்டினார். இதற்கிடையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 26 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
13 சிக்ஸர்களுடன் 174 ஓட்டங்கள் விளாசிய வீரர்! வாணவேடிக்கை காட்டி 416 ஸ்கோர் குவித்த தென் ஆப்பிரிக்கா
அணியின் ஸ்கோர் 209 ஆக உயர்ந்தபோது சதம் விளாசிய கில் 121 ஓட்டங்களில் மஹெடி ஹசன் பந்தில் அவுட் ஆனார்.
இந்திய அணி அதிர்ச்சி தோல்வி
அதன் பின்னர் அக்சர் படேல் மட்டும் போராட, ஏனைய வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறியதால் இந்திய அணி 49.5 ஓவரில் 259 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
அக்சர் படேல் 42 (34) ஓட்டங்கள் எடுத்தார். வங்கதேசம் தரப்பில் முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளும், டன்ஸிம் மற்றும் மஹெடி தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
Twitter (@BCBtigers)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |