பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: அவுஸ்திரேலிய நகரில் விதிக்கப்பட்ட தடை
அவுஸ்திரேலிய நகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் 14 நாட்களுக்கு பேரணி நடந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
போராட்டங்கள் நடந்த தடை
போண்டி கடற்கரை பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, போராட்டங்கள் நடந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் புதிய சட்டங்களின் கீழ், அடுத்த இரண்டு வாரங்களுக்கு சிட்னியின் பெரும்பகுதிகளில் பொது ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் தடை செய்யப்பட்டுள்ளதாக NSW காவல்துறை ஆணையர் அறிவித்தார்.
அவர் தென்மேற்கு பெருநகரம், வடமேற்கு பெருநகரம் மற்றும் மத்திய பெருநகர காவல் பகுதிகள் பொதுக் கூட்டங்களுக்கு தடை செய்யப்பட்டவை என்றார்.

இதனால் 14 நாட்கள் உத்தரவின் கீழ், எந்தவொரு போராட்டமும் அல்லது பேரணியும் அங்கீகரிக்கப்படாததாகக் கருதப்படும்.
பாதுகாப்பை இழப்பார்கள்
எனவே, பங்கேற்பாளர்கள் சுருக்கமான குற்றச் சட்டத்தின் கீழ் தங்கள் பாதுகாப்பை இழப்பார்கள். இதன் காரணமாக, போக்குவரத்து அல்லது பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிப்பதற்கான சாத்தியமான குற்றுச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடும்.

மேலும், போராட்டங்களுக்கு புதிய படிவம் 1 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், முன்னர் அங்கீகரிக்கப்பட்ட கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுபவர்களை அடையாளம் காண்பதற்காக, முகமூடிகளை அகற்றும்படி கோருவதற்கான புதிய அதிகாரங்களும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |