உயிருக்கு பேராபத்து.. கோவாவில் கோபி மஞ்சூரியனுக்கு தடை: என்ன காரணம் தெரியுமா?
சைவ பிரியர்களின் விருப்ப உணவான கோபி மஞ்சூரியன் கோவாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப விருப்ப உணவுகள் இருக்கும். ஒரு மாநிலத்தில் கிடைக்கும் உணவுகள் வேறு மாநிலத்தில் கிடைக்காது.
அசைவ உணவு பிரியர்களுக்கு சிக்கன் மஞ்சூரியன் எந்த அளவு பிடிக்குமோ, சைவ பிரியர்களுக்கு அதே அளவு கோபி மஞ்சூரியன் உணவு பிடிக்கும். காலி பிளவரை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கோபி மஞ்சூரியன் சைவ பிரியர்களுக்கு விருப்பமான உணவாகும்.
கோவாவில் தடை
கோபி மஞ்சூரியன் உணவின் சுகாதாரம் தொடர்பாக பல ஆண்டுகளாகவே சர்ச்சை நிலவி வருகிறது. இதனால், அந்த உணவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கோபி மஞ்சூரியன் உணவில் சுவைக்காவும், உணவு நிற ஈர்ப்புக்காகவும் சேர்க்கப்படும் செயற்கை நிறங்கள் மற்றும் அதன் சுகாதார பிரச்னைகள் காரணாமாக கோவாவில் உள்ள மாபுசா நகரத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவாவில் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதிப்பது முதன்முறையல்ல. கடந்த 2022 -ம் ஆண்டு மர்மகோவா நகராட்சி நிர்வாகம் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |