21ஆம் நூற்றாண்டில் பிரம்மாண்ட வெற்றி! புதிய வரலாறு படைத்த கத்துக்குட்டி அணி
ஆப்கானுக்கு எதிரான டெஸ்டில் வங்கதேச அணி 546 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி வரலாற்று சாதனை படைத்தது.
டாக்கா டெஸ்ட்
டாக்காவில் நடந்த டெஸ்டில் வங்கதேச அணி 662 ஓட்டங்களை வெற்றி இலக்காக ஆப்கானுக்கு நிர்ணயித்தது. அதன்படி களமிறங்கிய ஆப்கான் அணி, 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 45 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இன்று 4வது நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆப்கான் அணி, வங்கதேசத்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
21ஆம் நூற்றாண்டில் பிரம்மாண்ட வெற்றி
நேற்று கேப்டன் ரஹ்மத் ஷா ரிடையர் ஹர்ட் முறையில் வெளியேறிய நிலையில், இன்றைய நாளில் கடைசி விக்கெட்டில் விளையாடிய ஜஹிர் கானும் ரிடையர் ஹர்ட்டில் வெளியேற, ஆப்கான் அணி 115 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனதாக அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம் வங்கதேசம் 546 ஓட்டங்கள் வித்தியாசம் எனும் இமாலய வெற்றியை பெற்றது. இது 21ஆம் நூற்றாண்டிலேயே ஒரு அணிக்கு கிடைத்த மிகப்பெரிய டெஸ்ட் வெற்றி ஆகும்.
இதற்கு முன்பு, 1928ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணி 675 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் (எதிரணி அவுஸ்திரேலியா), 1934ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா 562 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் (எதிரணி இங்கிலாந்து) வெற்றி பெற்றிருந்தன.
வரலாற்று சாதனை படைத்த வங்கதேசம்
இந்த ஜாம்பவான் அணிகளுக்கு அடுத்தபடியாக டெஸ்டில் கத்துக்குட்டி அணியான வங்கதேசம் மூன்றாவது பெரிய வெற்றியைப் பெற்று சாதித்துள்ளது.
வங்கதேசம் தரப்பில் தஸ்கின் அகமது 4 விக்கெட்டுகளும், சோரிபுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இரு இன்னிங்சிலும் சதம் விளாசிய நஜ்முல் ஷாண்டோ (146, 124) ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
Walton Test Match: Bangladesh vs Afghanistan | Only Test | Day 04
— Bangladesh Cricket (@BCBtigers) June 17, 2023
Bangladesh won by 546 runs.
Full Match Details: https://t.co/MDvtIwN35K#BCB | #Cricket | #BANvAFG pic.twitter.com/sk24j4tteZ
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |