இரு இன்னிங்சிலும் சதம் விளாசிய வீரர்! 662 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த அணி
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்டில் வங்கதேச அணி 662 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
நஜ்முல் ஷாண்டோ அதிரடி சதம்
டாக்காவில் நடந்து வரும் டெஸ்டில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 382 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. நஜ்முல் ஷாண்டோ 146 ஓட்டங்களும், மஹ்முதுல் ஜோய் 76 ஓட்டங்களும் எடுத்தனர். ஆப்கான் தரப்பில் நிஜத் மசூட் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
BCB
அதன் பின்னர் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 146 ஓட்டங்களுக்கு சுருண்டது. எபடோட் ஹொசைன் 4 விக்கெட்டுகளும், சோரிபுல் இஸ்லாம், டைஜூல் இஸ்லாம் மற்றும் மெஹிதி ஹசன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
வங்கதேசம் டிக்ளேர்
அடுத்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய வங்கதேச அணி 4 விக்கெட் இழப்புக்கு 425 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சில் சதம் அடித்த ஷாண்டோ இரண்டாவது இன்னிங்சில் 124 ஓட்டங்கள் விளாசினார். மொமினுல் 121 ஓட்டங்களுடன் களத்தில் நின்றார்.
Cricfrenzy
இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்கு 662 எனும் இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.
மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் ஆப்கான் 2 விக்கெட் இழப்புக்கு 45 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ரஹ்மத் ஷா (10), நசிர் ஜமல் (5) ஆகியோர் களத்தில் உள்ளனர்.
AFP
Munir uz ZAMAN/AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |