ரஷ்யாவுக்கு பெரும் நெருக்கடி... உக்ரைன் விவகாரத்தில் ஜோ பைடன் அதிரடி
உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவின் பொருளாதாரத்தை நெருக்கடிக்கு தள்ள, ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை தடை செய்ய ஜனாதிபதி ஜோ பைடன் முடிவு செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் இந்த விவகாரம் தொடர்பில் வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது படையெடுப்பு தொடர்பாக ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பாரிய பொருளாதாரத் தடைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறித்த அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செவ்வாய்க்கிழமை அறிவிப்பார் என வெள்ளைமாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Today, I’m announcing that the United States is targeting a main artery of Russia’s economy.
— President Biden (@POTUS) March 8, 2022
We are banning all imports of Russian oil and gas.
அமெரிக்கா பொதுவாக ரஷ்யாவிலிருந்து ஒரு நாளைக்கு சுமார் 100,000 பீப்பாய்களை இறக்குமதி செய்கிறது, ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் இது 5% மட்டுமே. கடந்த ஆண்டு, அமெரிக்க எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதியில் சுமார் 8% ரஷ்யாவிலிருந்து பெறப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் அதிகளவில் ரஷ்யாவின் எரிபொருள் வினியோகங்களை சார்ந்தே உள்ளன. மேலும், ஐரோப்பிய நாடுகள் தங்கள் பயன்பாட்டில் 3ல் ஒரு பங்கு எரிவாயு ரஷ்யாவிடம் இருந்தே பெறப்படுகிறது.
எண்ணெய் இறக்குமதியை தடை செய்ய ஜனாதிபதி ஜோ பைடன் முடிவு செய்துள்ளது ரஷ்ய பொருளாதாரத்தில் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது உறுதியாகியுள்ளது. மேலும், ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எரிவாயுவை நம்பியிருக்கும் நிலையில் அமெரிக்கா இறக்குமதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.