அயர்லாந்து அணியை துவம்சம் செய்த இருவர்! 338 ஓட்டங்கள் குவிப்பு
அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 338 ஓட்டங்கள் குவித்துள்ளது.
சதத்தை தவறவிட்ட ஷகிப் அல் ஹசன்
சில்ஹெட்டில் இன்று தொடங்கிய இந்தப் போட்டியில் வங்கதேச அணி முதலில் துடுப்பாடியது. தமிம் இஃக்பால் 3 ஓட்டங்களில் வெளியேறிய நிலையில், லித்தன் தாஸ் 26 மற்றும் ஷாண்டோ 25 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினர்.
அதன் பின்னர் ஷகிப் அல் ஹசன் - ஹிரிடாய் இணை அயர்லாந்து பந்துவீச்சை சிதறடித்தது. மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்தனர்.
@BCBtigers (Twitter)
அணியின் ஸ்கோர் 216ஆக உயர்ந்தபோது ஷகிப் அல் ஹசன் 93 (89) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஷகிப் - ஹிரிடாய் இணை 135 ஓட்டங்கள் குவித்தது.
@BCBtigers (Twitter)
338 ஓட்டங்கள் குவிப்பு
அதனைத் தொடர்ந்து ஹிரிடாய் 85 பந்துகளில் 92 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். விக்கெட் கீப்பர் ரஹிம் அதிரடியாக 26 பந்துகளில் 44 ஓட்டங்கள் விளாசினார்.
@BCBtigers (Twitter)
வங்கதேச அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 338 ஓட்டங்கள் குவித்தது. அயர்லாந்து தரப்பில் ஹும் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
@BCBtigers (Twitter)